அடிச்சான் பாரு Amazon.. ரூ.5000, ரூ.10000 இல்லீங்க.. ரூ.30000 விலை குறைக்கப்பட்ட Samsung-ன் 200MP கேமரா போன்!
அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026-ன் (Amazon Great Summer Sale 2026) ஒரு பகுதியாக சாம்சங் நிறுவனத்தின் 200எம்பி கேமரா ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது "முரட்டு டிஸ்கவுண்ட்" அறிவிக்கப்பட்டுள்ளது. அது - கடந்த ஜனவரி 2025-ல் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S25 Ultra 5G) ஸ்மார்ட்போன் ஆகும்.
அப்படி என்ன டிஸ்கவுண்ட்? அமேசான் இந்தியா வலைத்தளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.99,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இது ரூ.1,29,999 க்கு அறிமுகமானது. அதாவது ரூ.30,000 நேரடி தள்ளுபடி அல்லது நேரடி விலைக்குறைப்பை பெற்றள்ளது.

கூடுதலாக ரூ.3000 பேங்க் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் (Bank Credit Card Discount) மற்றும் ரூ.2999 வரையிலான அமேசான் பே ஆபரும் (Amazon Pay Offer) அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆபர்கள் - சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் - அனைத்து ஒயிட் சில்வர், பிளாக், கிரே, சில்வர் ப்ளூ ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.9-இன்ச் (1400 x 3120 பிக்சல்ஸ்) டைனமிக் அமோஎல்இடி 2எக்ஸ் டிஸ்பிளே
- 1Hz-120Hz வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட்
- 2,600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 12ஜிபி வரையிலான ரேம்
- 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ்
- குவாட் ரியர் கேமரா செட்டப்
- 2எக்ஸ் இன்-சென்சார் ஜூம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS கொண்ட 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- எப்/2.2 அபெர்ச்சர் கொண்ட 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத் 5.4, என்எப்சி, யுடபுள்யூபி, ஜிபிஎஸ் ஆதரவு
- ஒருயுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி
சீனாவில் விற்பனையை நிறுத்திய சாம்சங்: இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இதர தயாரிப்புகள் மீதான சலுகைகள் அறிவிக்கப்படும் மறுகையில் சாம்சங்நிறுவனமானது சீனாவில் அதன் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏன்? சீன சந்தையில் நுகர்வோர் மின்னணு சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் உள்ளூர் சீன பிராண்டுகளின் அதிகரித்து வரும் அழுத்தத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு: "வேகமாக மாறிவரும் சந்தை நிலவரங்கள்" காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது. சாம்சங்கின் அதிகாரப்பூர்வ சீன இணையதளம் தற்போது இந்த மாற்றத்தை உறுதிப்படுத்தும் அறிவிப்பை காட்டுகிறது.
இருப்பினும், தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பிந்தைய சேவையும் வாடிக்கையாளர் ஆதரவும் வழக்கம் போல் தொடரும் என்று அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. ஸ்மார்ட் டிவிகள், மானிட்டர்கள், பிரிஜ்கள், வாஷிங் மெஷின்கள், ட்ரையர்கள், ஏசிக்கள், வேக்வம் கிளீனர்ள் மற்றும் ஏர் பியூரிஃபையர்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளின் உள்ளூர் விற்பனையை சீனாவில் சாம்சங் நிறுத்தவுள்ளது. ஆனால் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் தொடர்ந்து வாங்க கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications