Home
Deal of the day

ஏட்டிக்கு போட்டி.. ரூ.18000 குறைத்து பிரபல Samsung 5ஜி போனை அடிமட்ட விலைக்கு விற்கும் Flipkart.. எந்த மாடல்?

அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் கிரேட் சம்மர் சேல் 2026-ன் ஒரு பகுதியாக சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் மீது மிகப்பெரிய விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு போட்டியாக பிளிப்கார்ட் வலைத்தளமானது, அதே கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் உள்ள ஸ்டாண்டர்ட் மாடல் ஆன கேலக்ஸி எஸ்25 5ஜி மீது மிகப்பெரிய விலை குறைப்பை அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட் வலைதளத்தில் தற்போது நடக்கும் சாசா லேலே விற்பனையின் ஒரு பகுதியாக சாம்சங் கேலக்ஸி எஸ்25 5ஜி ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.56,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Samsung-ன் பிரபலமான 5ஜி போனை அடிமட்ட விலைக்கு விற்கும் Flipkart!

நினைவூட்டும் வண்ணம் இது ரூ.74,999 க்கு அறிமுகமானது. ஆக பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது இந்த ஸ்மார்ட்போனின் மீது நேரடியாக ரூ.18000 விலை குறைப்பை வழங்குகிறது. கூடவே ரூ.3325 வரையிலான பேங்க் தள்ளுபடி சலுகையும் கிடைக்கிறது. இதன் மூலம் தகுதியான பேங்க் கார்டுகளை கொண்டுள்ள வாடிக்கையாளர்களால் சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் விலையை மேலும் குறைக்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.2-இன்ச் டைனமிக் LTPO AMOLED 2எக்ஸ் டிஸ்பிளே
- 1080 x 2340 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் (1-120Hz அடாப்டிவ்) ரெஃப்ரெஷ் ரேட்
- 2600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்

- 12GB LPDDR5X ரேம் + 128GB, 256GB, அல்லது 512GB UFS 4.0 ஸ்டோரேஜ்
- 50MP ப்ரைமரி (OIS) கேமரா + 12MP அல்ட்ரா-வைட் கேமரா + 10MP டெலிஃபோட்டோ (3x ஆப்டிகல் ஜூம்) கேமரா
- 12MP செல்பீ கேமரா
- 4000mAh பேட்டரி
- 25W வயர்டு, 15W வயர்லெஸ் (Qi2) ஆதரவு
- IP68 தூசி / நீர் எதிர்ப்பு திறன்

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 5ஜி மீதான ஆபர்: அமேசான் இந்தியா வலைத்தளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.99,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இது ரூ.1,29,999 க்கு அறிமுகமானது. அதாவது ரூ.30,000 நேரடி தள்ளுபடி அல்லது நேரடி விலைக்குறைப்பை பெற்றள்ளது.

கூடுதலாக ரூ.3000 பேங்க் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் (Bank Credit Card Discount) மற்றும் ரூ.2999 வரையிலான அமேசான் பே ஆபரும் (Amazon Pay Offer) அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆபர்கள் - சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் - அனைத்து ஒயிட் சில்வர், பிளாக், கிரே, சில்வர் ப்ளூ ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.9-இன்ச் (1400 x 3120 பிக்சல்ஸ்) டைனமிக் அமோஎல்இடி 2எக்ஸ் டிஸ்பிளே
- 1Hz-120Hz வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட்
- 2,600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 12ஜிபி வரையிலான ரேம்
- 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ்

- குவாட் ரியர் கேமரா செட்டப்
- 2எக்ஸ் இன்-சென்சார் ஜூம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS கொண்ட 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா

- எப்/2.2 அபெர்ச்சர் கொண்ட 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத் 5.4, என்எப்சி, யுடபுள்யூபி, ஜிபிஎஸ் ஆதரவு
- ஒருயுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 gets Massive Discount in Flipkart SASA LELE Sale 2026 Check New Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X