Home
Deal of the day

நாங்க இல்லாம OFFER SALE-ஆ.. தள்ளுபடி விலையில் லேட்டஸ்ட் Samsung 5ஜி போன் விற்பனை.. 7.4mm ஸ்லிம் மாடல்!

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சாசா லேலே 2026 விற்பனையில் (Flipkart SASA LELE Sale 2026), சாம்சங் (Samsung) நிறுவனத்தின் லேட்டஸ்ட் எப்இ மாடல் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ 5ஜி (Galaxy S25 FE 5G) ஸ்மார்ட்போன் மீது ரூ.1000 டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம், இந்திய சந்தையில் கடந்த செப்டம்பர் 2025 இல் அறிமுகம் செய்யப்பட்ட போது, சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.44,999 என்கிற ஆரம்ப விலையில் வாங்க கிடைத்தது.

தள்ளுபடி விலையில் லேட்டஸ்ட் Samsung 5ஜி போன் விற்பனை!

ஆனால் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் உள்ள லிஸ்டிங்கின் படி, தற்போது இது ரூ.43,999 க்கு வாங்க கிடைக்கும். இது ஒரு கூப்பன் டிஸ்கவுண்ட் (Coupon Discount) ஆகும். பிளிப்கார்ட் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்வதற்கு முன்பாக இந்த கூப்பன் டிஸ்கவுண்ட்டை அப்ளை (Apply) செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் (Samsung Galaxy S25 FE 5G Specifications): இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட டெகா கோர் எக்ஸினோஸ் 2400 4என்எம் (Deca Core Exynos 2400 4nm) சிப்செட் கிடைக்கிறது.

7 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. ஜெமினி லைவ் (Gemini Live), நவ் பார் (Now Bar), சர்க்கிள் டூ சர்ச் (Circle to Search) மற்றும் ஆடியோ எரைஸ் (Audio Erase) போன்ற கேலக்ஸி ஏஐ (Galaxy AI) பீச்சர்களுடன் ஒன் யுஐ 8 (One UI 8) கிடைக்கிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) பாதுகாப்பு கொண்ட 6.7 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு வழக்கமாக கிடைக்கும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 8 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் உள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி, 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனுக்கு ஆர்மர் அலுமினியம் ஃபிரேம் (Armor Aluminum Frame) மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. பேட்டரியை பொறுத்தவரை, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,900mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. பேட்டரியுடன் 7.4எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது.

இதே பிளிப்கார்ட் விற்பனையில் 5 ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீதும் தள்ளுபடி கிடைக்கிறது:
1. ரியல்மி பி4 ப்ரோ (Realme P4 Pro) ரூ.28,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும்.
2. ரியல்மி பி4 ப்ரோ (Realme P4 Lite) ரூ.13,499 க்கு பதிலாக ரூ.12,749 க்கு வாங்க கிடைக்கும்.
3. ரியல்மி பி4 பவர் (Realme P4 Power) ரூ.27,999 க்கு பதிலாக ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கும்
4. ரியல்மி பி4 (Realme P4) ரூ.20,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும்.
5. ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G): ரூ.19,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கும்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 FE Selling At Discounted Price in Flipkart SASA LELE Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X