Home
Deal of the day

பிளிப்கார்ட் GOAT-க்கு மேமே சொன்ன அமேசான்.. நீ ரூ.5000 குறைச்சா நான் ரூ.16000 குறைப்பேன்.. Samsung 5ஜி போன்!

அமேசான் இந்தியா வலைத்தளமானது ஜூலை 4 ஆம் தேதி தொடங்கி 6 ஆம் தேதி வரை, அமேசான் ப்ரைம் டே சேல் 2026 (Amazon Prime Day Sale 2026) என்கிற சிறப்பு விற்பனை நடத்துகிறது.இதற்கு போட்டியாக பிளிப்கார்ட் வலைத்தளமும் அதே ஜூலை 4 முதல் 6 ஆம் தேதி வரை பிளிப்கார்ட் கோட் சேல் 2026 (Flipkart GOAT Sale 2026) என்கிற சிறப்பு விற்பனையை நடத்துகிறது.

இரண்டு இ-காமர்ஸ் தளங்களுமே பல வகையான ஸ்மார்ட்போன்கள் மீது மிகப்பெரிய அளவிலான நேரடி விலை குறைப்புகளை மற்றும் வங்கி தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. இதற்கிடையில் சாம்சங் நிறுவனத்தின் ஒரு பிரபலமான 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.5000 விலை குறைப்பிலும், அதே மாடல் அமேசான் இந்தியாவில் ரூ.16000 விலை குறைப்பிலும் வாங்க கிடைக்கிறது.

நீ ரூ.5000 குறைச்சா நான் ரூ.16000 குறைப்பேன்.. Samsung 5ஜி போன்!

அது சாம்சங் கேலக்ஸி எஸ்25 5ஜி (Samsung Galaxy S25 5G) ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அறிமுக விலை ரூ.74,999 ஆகும். ஆனால் தற்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் ரூ.5000 நேரடி விலைக்குறைப்பை பெற்று ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இதே ஸ்மார்ட்போனின் இதே ஸ்டோரேஜ் ஆப்ஷன் அமேசான் இந்தியா வலைதளத்தில் ரூ.16,100 நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.58,899 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலைகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம், அதாவது சற்று அதிகரிக்கலாம் அல்லது இன்னும் கூட குறையலாம் என்பதால், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், விரைவாக செயல்படவும்.

கேலக்ஸி எஸ்25 முக்கிய அம்சங்கள்:
- 6.2-இன்ச் FHD+ Dynamic LTPO AMOLED 2X டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட்
- 50MP ப்ரைமரி (OIS, f/1.8), 12MP அல்ட்ரா-வைட் (f/2.2), 10MP டெலிஃபோட்டோ (3x ஆப்டிகல் ஜூம், f/2.4) கேமரா
- 12MP (f/2.2) செல்பீ கேமரா
- 4000mAh பேட்டரி
- 25W வயர்டு மற்றும் 10W வயர்லெஸ் சார்ஜிங்
- IP68 ரேட்டிங்

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S25 Ultra 5G) மீது ரூ.45000 டிஸ்கவுண்ட்: அமேசான் இந்தியா வலைத்தளத்தில் வருகிற ஜூலை 4 ஆம் தேதி முதல் ப்ரைம் டே சேல் தொடங்க உள்ள சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகமான நேரத்தில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,29,999 க்கு வாங்க கிடைத்தது. ஆனால் அமேசான் ப்ரைம் டே விற்பனையின் போது இது ரூ.84,999 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.45,000 டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கும். இது நேரடி தள்ளுபடி + வங்கி தள்ளுபடி ஆகாய இரண்டையும் கலந்த விலையாக இருக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.9-இன்ச் (1400 x 3120 பிக்சல்ஸ்) டைனமிக் அமோஎல்இடி 2எக்ஸ் டிஸ்பிளே
- 1Hz-120Hz வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட்
- 2,600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்
- 12ஜிபி வரையிலான ரேம் - 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ்
- குவாட் ரியர் கேமரா செட்டப்

- 2எக்ஸ் இன்-சென்சார் ஜூம், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 200-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS கொண்ட 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- எப்/2.2 அபெர்ச்சர் கொண்ட 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S25 Deal Comparison Flipkart GOAT Sale Vs Amazon Prime Day Sale Starts July 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X