Home
Deal of the day

யப்பா சாமி.. ரூ.30000 விலை குறைக்கப்பட்ட Samsung 5ஜி போன்.. கிரெடிட், டெபிட் கார்டு எதுவும் வேண்டாம்!

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் மீது 53% வரையிலான டிஸ்கவுண்ட்டை வாரி வழங்கும் சாம்சங் ஃபேப் கிராப் பெஸ்ட் 2025 விற்பனை (Samsung Fab Grab Fest 2025) ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க.. மறுகையில் பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது பிரபலமான சாம்சங் மாடல் ஒன்றின் மீது நேரடியாக ரூ.30,000 விலை குறைப்பை அறிவித்துள்ளது.

அது சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ 5ஜி (Samsung Galaxy S24 FE 5G) மாடல் ஆகும். தற்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, எம்ஆர்பி விலையான ரூ.59,999 க்கு பதிலாக ரூ.30,000 விலை குறைப்பை பெற்று ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது எந்த பேங்க் கார்டு அல்லது கூப்பன் டிஸக்வுண்ட்டும் இல்லாத நேரடி விலை குறைப்பாகும்.

யப்பா சாமி.. ரூ.30000 விலை குறைக்கப்பட்ட Samsung 5ஜி போன்!

ஒருவேளை நீங்கள் இதே சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் ஹை எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்க விரும்பினால், அது ரூ.33,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் எம்ஆர்பி ரூ.65,999 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட எக்சினோஸ் 2400இ சிப்செட்டை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை போர்ட்ரெய்ட் படங்களுக்கான 50 எம்பி மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ராவைடு மற்றும் 8 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக 10 எம்பி செல்பீ கேமராவுடன் வருகிறது. கடைசியாக இது 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,700mAh பேட்டரியை பேக் செய்கிறது.

சாம்சங் ஃபேப் கிராப் பெஸ்ட் 2025 விற்பனையின் கீழ் என்னென்ன கேலக்ஸி ஸ்மார்ட்போன் மீது ஆபர் / டிஸ்கவுண்ட் கிடைக்கிறது? சாம்சங் நிறுவனத்தின் இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனை ஆனது ஏற்கனவே சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளங்களில் நேரலையில் உள்ளது.

இந்த விற்பனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் அதிகபட்ச சில்லறை விலையில் (எம்ஆர்பி) 53 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.12,000 வரை வங்கி தள்ளுபடியையும் பெறலாம். இந்த சலுகைகளுக்கு தகுதியான மாடல்களின் பட்டியல் இதோ:

1. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 7 (Galaxy Z Fold 7)
2. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 (Galaxy Z Flip 7)
3. சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Galaxy S25 Ultra)

4. சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Galaxy S25)
5. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Galaxy S25 Edge)
6. சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Galaxy S24 Ultra)
7. சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Galaxy S24)
8. சாம்சங் கேலக்ஸி ஏ56 (Galaxy A56)

9. சாம்சங் கேலக்ஸி ஏ55 (Galaxy A55)
10. சாம்சங் கேலக்ஸி ஏ36 (Galaxy A36)
11. சாம்சங் கேலக்ஸி ஏ35 (Galaxy A35)
12. சாம்சங் கேலக்ஸி ஏ26 (Galaxy A26)
13. சாம்சங் கேலக்ஸி ஏ17 (Galaxy A17)

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S24 FE 5G gets Rs 30000 Price Cut Now Available For Rs 29999 in Flipkart Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X