பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.11874 க்கு வந்த Samsung 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி (Samsung Galaxy F70e 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. மலிவான விலைக்கு சாம்சங் ஸ்மார்ட்போனை தேடிக் கொண்டிருந்தால், இந்த சூப்பர் டீலில் வாங்கி கொள்ளலாம். டிசைனும் பிரீமியமான பீல் கொடுக்கும்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி மாடலுக்கு 26 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.12,499 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்குகளில் கார்டுகளுக்கு ரூ.625 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,874 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70e 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. லேட்டஸ்ட் ஒன் யுஐ 8.0 (One UI 8.0) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் போக 6 ஜெனரேஷனுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை பெற்று கொள்ளலாம். மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது. சாம்சங் கிநாக்ஸ் செக்யூரிட்டி (Samsung Knox Security) கொண்ட பட்ஜெட் மாடலாகவும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப அவுட்புட் கொடுக்குமபடி ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் பெற்று கொள்ளலாம்.
மேலும், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 16 மில்லியன் கலர் டெப்த் கொண்ட டிஸ்பிளேவாக இருக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. பட்ஜெட்டில் கிடைக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் வரும் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) உள்ளது.
ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமராவை பெற்று கொள்ளலாம். மெயின் கேமராவில் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது. ஆனால், ஓஐஎஸ் டெக்னாலஜி கொடுக்கப்படவில்லை. இருப்பினும், 10எக்ஸ் ஜூம் கொடுக்கும் மாடலாகவே இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி கிடைக்கிறது. ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் உள்ளது.
செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுத்து உள்ளது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மட்டுமே கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுத்துள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொண்டுள்ளது.
இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) கிடைக்கிறது. வீகன் லெதர் பேனல் டிசைனில் ஸ்பாட்லைட் ப்ளூ (Spotlight Blue) மற்றும் லைம்லைட் கிரீன் (Spotlight Blue) ஆகிய கலர்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications