இது செம்ம டைம்மு.. ரூ.13000 பட்ஜெட்ல SAMSUNG போன்.. 5000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் பிளிப்கார்ட் பிக் ஃபெஸ்டிவ் தமாகா சேல் 2025 (Flipkart Big Festive Dhamaka Sale 2025) என்னும் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி (Samsung Galaxy F36 5G) ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத தள்ளுபடி கிடைக்கிறது. ஏற்கனவே, விலை குறைப்பு கிடைப்பதால், இதுவரையில் கிடைக்காத கம்மி விலைக்கு வாங்கி கொள்ளலாம். எக்ஸினோஸ் 1380 சிப்செட் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.17,499ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.18,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் விலை குறைப்பு போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.13,999 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.15,499 பட்ஜெட்டிலும் கிடைக்கிறது.

மேலும், குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.700 உடனடி டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.13,299 பட்ஜெட்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல 8 ஜிபி ரேம் வேரியண்ட்டுக்கு ரூ.775 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,724 பட்ஜெட்டில் இந்த வேரியண்ட்டை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F36 5G Specifications): இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுபோக ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் உள்ளது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 எஸ்ஓசி (Octa Core Exynos 1380 SoC) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஒன் யுஐ 7 (One UI 7) மற்றும் பட்ஜெட் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பட்ஜெட்டிலும் 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களை கொடுக்கிறது. மேலும், 6 வருட செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கின்றன. பட்ஜெட்டிலும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கிறது. ஆகவே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது.
10X ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. அதேபோல ஆட்டோ போகஸ் கொடுத்து இருக்கிறது. 4K ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 13 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியை கொடுக்கிறது. டைப்-சி சார்ஜிங் மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் கிடைக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போனில் ஓனிக்ஸ் பிளாக் (Onxy Black), கோரல் ரெட் (Coral Red) மற்றும் லக்ஸ் வயலெட் (Luxe Violet) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில் லெதர் பேனலும் கிடைக்கிறது. கேமரா பம்ப் மற்றும் மிடில் ஃபிரேம் ஆகியவை மெட்டாலிக் ஃபினிஷிங் கொடுக்கிறது. ஆகவே, பிரீமியம் லுக்கை பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications








