இப்பவே ஆர்டர் போட்ருங்க.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி (Samsung Galaxy F17 5G) ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,400 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.12,400 விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F17 5G specifications): எக்ஸிநோஸ் 1330 பிராசஸர் (Exynos 1330 processor) உடன் சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 2340 x 1080 பிக்சல்ஸ் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன் மற்றும் பல சிறப்பான வசதிகள் உள்ளன.
இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதுவும் One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 6 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். பின்பு 6 வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) இந்த போனில் உள்ளது. மேலும் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) ஆதரவும் இந்த போனில் உள்ளது.
IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். பின்பு 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் போன். குறிப்பாக இந்த சாம்சங் போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.


Click it and Unblock the Notifications








