போடு தகிட தகிட.. ரூ.9000 க்கு இறங்கிய தரமான Samsung போன்.. 7.6மிமீ ஸ்லிம் டிசைனில் 5000mAh பேட்டரி, IP54!
கடந்த அக்டோபர் 2025 இல் சாம்சங் (Samsung) நிறுவனமானது, அதன் எம் சீரீஸ், எஃப் சீரீஸ் மற்றும் ஏ சீரிஸின் கீழ் தலா ஒரு ஸ்மார்ட்போன் என தனித்தனியாக மொத்தம் மூன்று புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்தது.
சாம்சங் கேலக்ஸி எம் சீரீஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எம்07 (Samsung Galaxy M07) மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. அதே நேரம் எப் சீரீஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எப்07 (Samsung Galaxy F07) மாடலும், ஏ சீரீஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி ஏ07 (Samsung Galaxy A07) மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

2025 அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, இன்னமும் இந்த 3 ஸ்மார்ட்போன்களுமே சாம்சங்கின் பட்ஜெட் விலை பிரிவின் கீழ் அட்டகாசமாக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களாக உள்ளன. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எப்07 மாடல். ஏனென்றால் இது பார்ப்பதற்கு சூப்பர்-பட்ஜெட் விலை மாடலை போலேவே இருக்காது. தற்போது இது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.10,000 க்கும் குறைவானபட்ஜெட்டின் கீழ் வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எப்07 4ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் க்ரீன் கலர் ஆப்ஷன் ஆனது, தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் அதன் எம்ஆர்பி விலையான ரூ.11,999 க்கு பதிலாக ரூ.2500 டிஸ்கவுண்ட்டை பெற்று ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது. கூடவே ரூ.475 பேங்க் டிஸ்கவுண்ட்டும் கிடைக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.9000 பட்ஜெட்டிற்கு கொண்டு வர முடியும்.
என்னென்ன அம்சங்கள்? சாம்சங் கேலக்ஸி எம்07, எப்07 மற்றும் ஏ07 ஆகிய 3 மாடல்களுமே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் எல்பிஎஸ் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் இந்த 3 மாடல்களுமே ஐபி54 ரேட்டிங்கையும் கொண்டுள்ளன.
கூடுதலாக, நீடித்து நிலைக்கும் தன்மைக்காக இந்த ஸ்மார்ட்போன்கள் கிளாஸ் பைபர் ரெயின்போர்ஸ்டு பாலிமர்-ஐ (Glass Fiber Reinforced Polymer) கொண்டு உள்ளன. சிப்செட்டை பொறுத்தவரை இந்த 3 ஸ்மார்ட்போன்களுமே மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன.
நல்ல கேமிங் திறனிற்காக இந்த ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக்கின் ஹைப்பர்எஞ்சின் 2.0 லைட் தொழில்நுட்பமும் (MediaTek's HyperEngine 2.0 Lite Technology) உள்ளது. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இந்த போன்கள் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன்யுஐ 7 (One UI 7) கொண்டு இயங்குகின்றன. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு 6 ஆண்டுகளுக்கு மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
ரேம் மற்றும் இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, சாம்சங்கின் இந்த 3 புதிய ஸ்மார்ட்போன்களுமே 64 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் ஆகியவற்றை கொண்டுள்ளன. கூடவே மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி 2டிபி வரை விரிவாக்க கூடிய ஆதரவையும் வழங்குகின்றன .
கேமராக்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன்களில் 50எம்பி ஆட்டோஃபோகஸ் பிப்ரைமரி சென்சார் மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளன. முன்பக்கத்தில், வீடியோ மற்றும் செல்பீக்களுக்காக 8எம்பி கேமரா உள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன்கள் 25W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளன. கேலக்ஸி எப்07 மாடலானது ஐபி 54 ரேட்டிங் உடன் வருகிறது என்பதும், இது 7.6மிமீ ஸ்லிம் டிசைனை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications