விலை குறைப்பு + பேங்க் டிஸ்கவுண்ட்.. அடேங்கப்பா ஆபரில் Samsung 5ஜி போன்.. 5000mAh பேட்டரி, 50MP கேமரா, IP67!
சாம்சங் (Samsung) நிறுவனம் அடுக்கடுக்காக புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது; இன்னமும் செய்ய போகிறது. இதற்கிடையில் பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது கடந்த மார்ச் 2025 இல் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி மாடலின் மீது நேரடி விதை குறைப்பு + பேங்க் டிஸ்கவுண்ட்டை அறிவித்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் இது சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி உடன் அறிமுகமானது.
என்ன ஆபர்? அறிமுகமான போது சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆனது ரூ.32,999 க்கு வாங்க கிடைத்தது. தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் இது ரூ.31,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது ரூ.1000 நேர விலை குறைப்பாகும். கூடவே இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.1600 பேங்க் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை நீங்கள் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இதன் எல்லா ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே விலை அதிகரித்து விட்டன என்பதை குறிப்பிட விரும்புகிறோம். உதாரணத்திற்கு, இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.41,999 க்கு அறிமுகமானது. ஆனால் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.42,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஆகிய இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா விக்டஸ் பிளஸ் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.7-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (1080 x 2340 பிக்சல்ஸ்) சூப்பர் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளன. மேலும் இரண்டுமே ஆட்டோ டிரிம், பெஸ்ட் ஃபேஸ், ஏஐ செலக்ட் மற்றும் ரீட் அலவுட் போன்ற ஏஐ அம்சங்களை ஆதரிக்கின்றன.
சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஆனது எக்ஸினோஸ் 1580 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் உடன் வருகிறது. இரண்டுமே 12ஜிபி வரை ரேம், 256ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கின்றன மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7 உடன் ஷிப் செய்யப்படுகின்றன. இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்குமே 6 ஜெனரேஷன் ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் ஆறு வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ56 5ஜி ஆனது ஓஐஎஸ் ஆதரவுடன் 50எம்பி ப்ரைமரி சென்சார், 12எம்பி அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி மாடலும் இதே போன்ற செட்டப்பை தான் கொண்டுள்ளது. ஆனால் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் சென்சாரை கொண்டுள்ளது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 12 மெகாபிக்சல் செல்பீ கேமராக்கள் உள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை இரண்டுமே 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி67 ரேட்டிங் கட்டமைப்பை கொண்டுள்ளன. கடைசியாக, கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை 5ஜி, 4ஜி LTE, வைஃபை, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளன.
சாம்சங்கின் அடுத்தடுத்த அறிமுகம்: தொழில்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சியோல் எகனாமிக் டெய்லி (Seoul Economic Daily) ஆனது, சாம்சங் நிறுவனம் தனது அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை வருகிற ஜூலை 22 ஆம் தேதி அன்று லண்டனில் நடத்தும் என்று தெரிவிக்கிறது.
என்னென்ன அறிமுகமாகும்? இந்த நிகழ்வின் போது, சாம்சங் நிறுவனம், கேலக்ஸி வாட்ச் 9 சீரீஸ் (Galaxy Watch 9 series) உடன் கேலக்ஸி இஸட் ஃபோல்டு 8 (Galaxy Z Fold 8) மற்றும் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 8 (Galaxy Z Flip 8) ஸ்மார்ட்போன்களையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications