செம்ம டிமாண்ட்.. பாதி விலைக்கு கிடைக்கும் Samsung 5ஜி போன்.. IP67, 5000mAh பேட்டரி, 50MP கேமரா வேற!
பிளிப்கார்ட் நிறுவனம் அதன் இகாமரஸ் வலைத்தளத்தில் - பிளிப்கார்ட் ஃபெஸ்டிவ் தமாக்கா சேல் 2025 (Flipkart Festive Dhamaka Sale 2025) என்கிற புதிய பண்டிகை கால விற்பனையை தொடங்கியுள்ளது. அக்.2 ஆம் தேதி முடிந்த பிக் பில்லியன் டேஸ் சேல் 2025-ஐ தொடர்ந்து இந்த விற்பனை அக்.4 ஆம் தேதி முதல் தொடங்கியது.
இதில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,000 தள்ளுபடியை பெற்று ரூ.33,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு.. அதாவது கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலையில் வாங்க கிடைக்கும் என்று பிளிப்கார்ட் வலைதளத்தின் மொபைல் ஆபர்கள் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் டூயல்-சிம் (நானோ) ஆதரவு உடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.6-இன்ச் புல் எச்டி பிளஸ் (1080 x 2408 பிக்சல்ஸ்) சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போன் ஆனது 4என்எம் ப்ராசஸ் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட எக்ஸினோஸ் 1480 சிப்செட் (Exynos 1480 SoC) கொண்டு இயக்கப்படுகிறது. இது 12 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஆட்டோஃபோகஸுடன் கூடிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளன. முன்பக்கத்தில், இது 13 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 25W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. கவனிக்க்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை - ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் நாக்ஸ் வால்ட் செக்யூரிட்டி அம்சமும் உள்ளது மற்றும் இது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி67 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.
பிளிப்கார்ட் ஃபெஸ்டிவ் தமாக்கா சேல் 2025 இல் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது? சாம்சங் கேலக்ஸி எஸ் 24 (Samsung Galaxy S24) ரூ.74,999 க்கு பதிலாக ரூ.38,999 க்கும், சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE) ரூ.59,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
இதேபோல மோட்டோரோலா எட்ஜ் 60 பியூஷன் (Motorola Edge 60 Fusion) ரூ.25,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கும்,
மோட்டோரோலா எட்ஜ் 60 பியூஷன் (Motorola Edge 60 Fusion) ரூ.25,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கும், மோட்டோ ஜி96 (Moto G96) ரூ.20,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கும் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன்கள் மீதான சலுகைகளை [பொறுத்தவரை ஐபோன் 16 (iPhone 16) ரூ.56,999 க்கு வாங்க கிடைக்கும். இது அதன் அசல் விலையான ரூ.69,999 இலிருந்து குறைக்கப்பட்ட விலையாகும். இதேபோல ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) ரூ.85,999 க்கும் மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ரூ.1,04,999 க்கும் என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








