Home
Deal of the day

அமேசானில் சலுகை விலையில் கிடைக்கும் அட்டகாசமான சாம்சங் மற்றும் ரியல்மி போன்கள்.!

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகமாகும் என்பதால் சாம்சங் உட்பட பல நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

அமேசானில் சலுகை விலையில் கிடைக்கும் சாம்சங் மற்றும் ரியல்மி போன்கள்.

அதேபோல் இந்தியாவில் சாம்சங் போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ13

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட கேலக்ஸ ஏ13 ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 24 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1080 x 2408 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

அதேபோல் 2.2ஜிகாஹெர்டஸ் ஆக்டோ-கோர் பிராசஸர், 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ13 போன்.

ரியல்மி நார்சோ 50ஏ

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ போனுக்கு அமேசானில் 11 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.12,499-விலையில் வாங்க முடியும். ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

720x1,600 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் ஏஆர்எம் Mali-G52 GPU ஆதரவு, Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + black and white portrait லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது
இந்த ரியல்மி நார்சோ 50ஏ போன். மேலும் 8எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எஃப்42 5ஜி போனுக்கு அமேசானில் 32 சதவீதம் சலுகை
வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.16,285-விலையில் வாங்க முடியும்.

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, மீடியாடெக் Dimensity 700 சிப்செட்,5000 எம்ஏஎச் பேட்டரி, 8எம்பி செல்பீ கேமரா, 64எம்பி ரியர் கேமரா, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம்

அமேசானில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் போனுக்கு 15 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை ரூ.11,499-விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, Unisoc T612 பிராசஸர், 50எம்பி ஏஐ ட்ரிபிள் ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ரியல்மி நார்சோ 30 5ஜி


6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட ரியல்மி நார்சோ 30 5ஜி போனுக்கு அமேசானில் 11 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனை தற்போது ரூ.15,999-விலையில் வாங்க முடியும்.

அதேபோல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, மீடியாடெக் Dimensity 700 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 30 5ஜி போன்.

English summary
Samsung and Realme phones available at discounted prices on Amazon! Here is the list.: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X