ரூ.6000 டிஸ்கவுண்ட்.. iPhone ஆர்டர் வெளுக்குது.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. 256GB மெமரி.. எந்த மாடல்?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 (iPhone 17) ஸ்மார்ட்போனுக்கு ரூ.6,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஓஎல்இடி டிஸ்பிளே, 48 எம்பி மெயின் கேமரா, 256 ஜிபி மெமரி போன்ற பீச்சர்களை கொண்ட இந்த ஐபோன் 17 ஸ்மார்ட்போனின் விற்பனை பட்டையை கிளப்பி வருகிறது. இந்த தள்ளுபடி விவரங்கள் மற்றும் என்னென்ன பீச்சர்களை ஐபோன் 17 கொடுக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 256 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ. 82,900ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.6,000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.76,990 விலைக்கு இந்த ஐபோன் 17 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். இஐஎம் ஆப்ஷனில் வாங்கினாலும் பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

ஐபோன் 17 அம்சங்கள் (iPhone 17 Specifications): செராமிக் ஷீல்டு 2 (Ceramic Shield 2) புரொடெக்சன் கொண்ட 6.3 இன்ச் (2622 x 1206 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை இந்த ஐபோன் 17 கொண்டுள்லது. 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர் (HDR) கிடைக்கிறது.
ஐபோன்களில் பிரத்யேகமாக கிடைக்கும் ட்ரூ டோன் (True Tone) மற்றும் ப்ரோமோஷன் (ProMotion) டிஸ்பிளே டெக்னாலஜிகள் கிடைக்கின்றன. ஐஓஎஸ் 26 (iOS 26) கொண்ட மாடலாக இந்த ஐபோன் 17 ஸ்மார்ட்போன் இருக்கிறது. 256 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 512 ஜிபி மெமரி வேரியண்ட்டும் இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.
5 கோர் ஜிபியு கொண்ட சிக்ஸ் கோட் ஏ19 3என்எம் (Six Core A19 3nm) சிப்செட் கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் மற்றும் ரெடினா ஃபிளாஷ் சப்போர்ட் கொண்ட 18 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஐபோன் 17 கொடுத்துள்ளது. இதில் 4K ரெசொலூஷன் கிடைக்கிறது. ஆகவே, செல்பீ மற்றும் வீடியோ காலிங் பிரீமியமாக இருக்கிறது. மேக்ரோ போட்டோகிராபி கிடைக்கிறது.
48 எம்பி மெயின் கேமரா மற்றும் 48 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மெயின் கேமராவுக்கு சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் போட்டோனிக் என்ஜின் மற்றும் ட்ரூ டோன் ஃபிளாஷ் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
4கே டால்பி விஷன் (4K Dolby Vision) வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. சினிமாடிக் மோடில் (Cinematic mode) ரெக்கார்ட் செய்து கொள்ளலாம். மேலும், ஆட்டோ போகஸ் கொடுக்கப்பட்ட உள்ளது. பேசியல் ஐடி கிடைக்கிறது. ஆக்சன் பட்டன் கிடைத்துள்ளது. ஆகவே, கேமரா, போகஸ் உள்ளிட்ட கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம்.
கேமராவில் டெப்த், ஜூமிங் மற்றும் எக்ஸ்போசர் உள்ளிட்ட கன்ட்ரோல்களை செய்து கொள்ளாம். ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை (Stereo speakers) இந்த ஐபோன் 17 கொடுத்து உள்ளது. 7.95 எம்எம் தடிமனில் பில்ட்-இன் லித்தியம் அயான் பேட்டரி கிடைக்கிறது. 25W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 40W அடாப்டர் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 177 கிராம் எடை கொண்டுள்ளது.
வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 6 (Bluetooth 6) மற்றும் செகண்ட்-ஜெனரேஷன் அல்ட்ரா வைடுபேண்ட் சிப் (Second-generation Ultra Wideband chip) கிடைக்கிறது. பிளாக் (Black), ஒயிட் (White), மிஸ்ட் ப்ளூ (Mist Blue), சேஜ் (Sage) அல்லது லாவண்டர் (Lavender) ஆகிய கலர் ஆப்ஷன்களில் இந்த ஐபோன் 17 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications