ரூ.7000 முதல் புது பிரிட்ஜ் வாங்கலாமா? சிங்கிள் டோர் Refrigerator வாங்கலாமா? வேண்டாமா?

புதிதாக ரெப்ரிஜிரேட்டர் (Refrigerator) அல்லது பிரிட்ஜ் (Fridge) வாங்க ஆசையாக இருக்கிறதா? உங்கள் வீட்டில் பிரிட்ஜ் இல்லையா? அல்லது உங்களிடம் இருக்கும் பிரிட்ஜ் பழையதாகிவிட்டதா? காரணம் ஏதுவாக இருந்தாலும் சரி, இந்த தீபாவளிக்கு ஒரு புதிய பிரிட்ஜை நாம் வாங்குகிறோம் என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு என்னப்பா ரொம்ப ஈஸியா சொல்லிடுவீங்க, அவ்வளவு பெரிய தொகை யார்கிட்ட இருக்கு? என்று நீங்கள் மனதிற்குள் நினைப்பது எங்களுக்கே கேட்கிறது.

ரூ.7000-க்கு புது பிரிட்ஜ் வாங்கலாமா? சிங்கிள் டோர் இருந்தா நல்லதா?

அதிக செலவு இல்லாமல், கியூட்டாக, குட்டியாக கம்மி காசில் வாங்கக்கூடிய டீசெண்டான பிரிட்ஜ் மாடல்களை தான் இந்த பதிவில் உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். நீங்கள் தனிநபர் என்றாலோ அல்லது பேச்சிலர் என்றாலோ, இந்த பதிவில் உள்ள மினி பிரிட்ஜ் மாடல்களை பாருங்கள்.

நீங்கள் குடும்பத்துடன் வாழும் நபர் என்றால், இந்த பதிவில் உள்ள பட்ஜெட் பிரெண்ட்லி பிரிட்ஜ் மாடல்களை பாருங்கள். குறைந்த விலையாக ரூ.7000 விலைப் புள்ளி முதல் ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ரெப்ரிஜிரேட்டர் மாடல்களை தான் இங்குப் பார்க்கப்போகிறோம்.

1. Hisense Single Door Mini Refrigerator

Hisense 46 L 2 Star Direct-Cool Single Door Mini Refrigerator (RR46D4SBN, Black)

நீங்கள் ஒரு பேச்சிலர் அல்லது உங்கள் வீட்டில் பெரிய பிரிட்ஜ் வைக்க போதிய இடமில்லை என்றால், இந்த மினி பிரிட்ஜை (Mini Refrigerator) தாராளமாக நீங்கள் வாங்கலாம். இது 46L அளவு கொண்டது. இது 2 Star சான்றுடன் Direct-Cool அம்சத்தில் இயங்கும் சிங்கிள் டோர் மாடலாகும். இதன் அசல் விலை ரூ. 10,990 என்றாலும் கூட, இன்றைய சலுகையில் இதை நாம் வெறும் ரூ. 7,990 விலையில் வாங்கலாம். இது 10 வருட கம்ப்ரெஸ்ஸார் வாரன்டி உடன் வருகிறது.

2. Haier Single Door Mini Refrigerator

Haier 53 L 2 Star Direct-Cool Single Door Mini Refrigerator (HR-65KS, Black)
₹10,290.00
₹12,500.00
18%

முன்னர் நாம் பார்த்த மாடலை விட இதன் கபாஸிட்டி அளவு (53L) அதிகமாக இருக்கிறது. நீங்கள் முரட்டு சிங்கிள் பாய்ஸ் ஆக இருந்தாலும் சரி, அல்லது நீங்கள் முரட்டு சிங்கிள் கேர்ள் ஆக இருந்தாலும் சரி, இந்த "சிங்கிள்" டோர் பிரிட்ஜ் உங்களின் தேவையை பூர்த்தி செய்துவிடும். இதன் அசல் விலை ரூ. 9,290 மட்டுமே. ஆனால், இன்றைய சலுகையில் இதை வெறும் ரூ. 8,990 விலையில் வாங்கலாம். Haier ஒரு தரமான பிராண்ட் என்பதை மறக்க வேண்டாம். இது 5 வருட கம்ப்ரெஸ்ஸார் வாரன்டி உடன் வருகிறது.

3. Hisense Single Door Mini Refrigerator 94 L (RR94D4SRN)

Hisense 94 L 2 Star Direct-Cool Single Door Mini Refrigerator (RR94D4SRN, Red)

நாம் முதலில் பார்த்தது மினி பிரிட்ஜ் மாடல்கள், அதில் இருக்கும் கபாஸிட்டி (Capacity) உங்களுக்கு போதாது என்று நினைத்தால், இந்த கூடுதல் அளவு கொண்ட மினி ரெப்ரிஜிரேட்டர் மாடல்களை வாங்கலாம். இவை 94L அளவுடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 14,990 ஆகும். Amazon சிறப்புச் சலுகையின் மூலம் வெறும் ரூ. 10,490 விலைக்கு இதை வாங்கலாம். குட்டி குடும்பத்தினருக்கு இந்த பிரிட்ஜ் போதுமானதாகும். இது 1 வருடத் தயாரிப்பு + 10 வருட கம்ப்ரெஸ்ஸார் வாரன்டி (compressor Warranty) உடன் வருகிறது.

ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!

4. Godrej Direct Cool Single Door Refrigerator

Godrej 99 L 1 Star Direct Cool Single Door Refrigerator (RD CHAMP 114A 13 WRF ST GR, Steel Grey, Wired Shelves)
₹12,000.00
₹13,500.00
11%

Godrej பல ஆண்டுகளாக ரெப்ரிஜிரேட்டர் துறையில் தரமான தயாரிப்புகளை வழங்கி வருகிறது. இந்த ரெப்ரிஜிரேட்டர் 99L அளவுடன் ரூ. 13,500 விலையில் விற்பனையாகிறது. இன்றைய சலுகையை பயன்படுத்தினால், இதை வெறும் ரூ. 10,490 விலையில் வாங்கலாம். இது 1 வருட தயாரிப்பு (Product Warranty) + 5 வருட கம்ப்ரெஸ்ஸார் வாரன்டி உடன் வருகிறது. இது எக்ஸ்ட்ரா ஸ்டோரேஜ் அம்சத்தை வழங்குகிறது.

5. Haier 170L Single Door Refrigerator

Haier 170 L 2 Star Single Door Refrigerator (HED-17TBR, Burgundy Red)

உங்கள் குடும்பம் சற்று பெரியது, ஒரு 150L அளவை தாண்டிய ரெப்ரிஜிரேட்டர் தான் எங்களுக்கானது, ஆனால் விலை ரூ.10,000-திற்குள் தான் இருக்க வேண்டும் என்று பிளான் செய்பவர்களுக்கு இந்த Haier 170L Single Door Refrigerator தான் பெஸ்ட் சாய்ஸ். இது 170L அளவுடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 17,950 ஆகும். இதன் சலுகை விலை ரூ. 10,990 மட்டுமே. இன்றைய ஆகச்சிறந்த பெஸ்ட் டீல் (Best Deal Refrigerator) இது மட்டும் தான். இதுவும் 1 + 10 வருட வாரன்டி உடன் வருகிறது.

6. Onida Direct-Cool Single Door Refrigerator

Onida 92 L 1 Star Direct-Cool Single Door Refrigerator (RDS1001SG, Steel Grey)

எலைட் லுக்கில், ஒரு நம்பகமான பிராண்டில் இருந்து பிரீமியம் ரெப்ரிஜிரேட்டரை (Premium Refrigerator) வாங்க வேண்டும் என்பவர்கள் இந்த Onida Refrigerator மாடலை பாருங்கள். இதன் அசல் விலை ரூ. 15,990. இதன் தற்போதைய சலுகை விலை ரூ. 10,999 ஆகும். இதன் கபாஸிட்டி 92L மட்டுமே என்பதைக் கவனிக்க மறக்காதீர்கள். இதுவும் 1 வருடத் தயாரிப்பு + 10 வருட கம்ப்ரெஸ்ஸார் வாரன்டி உடன் வருகிறது.

இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!

7. Whirlpool Direct-Cool Single Door Refrigerator

Whirlpool 190 L 2 Star Direct-Cool Single Door Refrigerator (WDE 205 PRM 2S, Solid Wine)

இது 190 L அளவுடன் வருகிறது. இது Whirlpool பிராண்டிடம் இருந்து கிடைக்கும் பட்ஜெட் பிரெண்ட்லி ரெப்ரிஜிரேட்டர் (Budget Friendly Refrigerator) மாடலாகும். இதன் அசல் விலை ரூ. 14,400 ஆகும். ஆனால், இன்றைய சலுகை மூலம் வெறும் ரூ. 11,990 விலையில் இதை வாங்கலாம். உங்களிடம் ICICI கிரெடிட் கார்டு இருந்தால் கூடுதலாக 10% தள்ளுபடியைப் பெறலாம்.

சிங்கிள் டோர் பிரிட்ஜ் நல்லதா? இல்லை கெட்டதா? அல்லது சிங்கிள் டோர் பிரிட்ஜ்களை வாங்கலாமா? வேண்டாமா? என்று சிலருக்கு சந்தேகம்இருக்கிறது. குழப்பமடையும் அளவிற்கு இதில் பெரிதாக எந்த புதிரும் இல்லை என்பதே உண்மை. அதேபோல், நாம் வாங்க நினைக்கும் பட்ஜெட்டிற்குள் நமக்கு சிங்கிள் டோர் மாடல்கள் தான் வாங்க கிடைக்கும் என்பதே மற்றொரு உண்மையாகும். சிங்கிள் டோர் உடன் வரும் மாடல்களை நீங்கள் தாராளமாக வாங்கலாம், காரணம், இவை பயன்படுத்த எளிதானது.

இதேபோல், இன்னும் ஏராளமான ரெப்ரிஜிரேட்டர் மாடல்கள் மீதும் இப்போது தாராளமான தள்ளுபடி கிடைக்கிறது. இந்த பண்டிகை கால சிறப்புச் சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், தாராளமான தள்ளுபடியுடன், அதிக காசு செலவு செய்யாமல், உங்கள் வீட்டிற்கு ஒரு புதிய பிரிட்ஜை பேக் செய்யலாம்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X