அமேசான்: ரூ.20.000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

ரெட்மி நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அமேசான்:ரூ.20.000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போன்கள்

மேலும் இந்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி நிறுவனம். இப்போது அமேசான் தளத்தில் ரூ.20.000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11டி

Redmi Note 11T 5G (Matte Black 8GB RAM 128GB ROM) | Dimensity 810 5G | 33W Pro Fast Charging
₹19,999.00
₹22,999.00
13%

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.19,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த
மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் மாடல் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்
என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ரெட்மி நோட் 11டி 5ஜி சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
ஜிபிஎஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி நோட் 10 ப்ரோ

Redmi Note 10 Pro (Dark Night, 6GB RAM, 128GB Storage) -120hz Super Amoled Display|64MPwith 5mp Super Tele-Macro

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.17,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2,400x1,080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.
அதேபோல் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது நான்கு பின்புற கேமராக்களுடன் வருகிறது. குவாட் கேமரா அமைப்போடு இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5 எம்பி சூப்பர் மேக்ரோ ஷூட்டர் கேமரா மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் உடன் வருகிறது. அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 5020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்

Redmi Note 10 Pro Max (Glacial Blue, 6GB RAM, 128GB Storage) -108MP Quad Camera|120Hz Super Amoled Display

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.19,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இருக்கிறது. இது ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய
எஸ்டி கார்டு ஸ்லாட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவை உள்ளது. ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 108 எம்பி முதன்மை கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 8 எம்பி மூன்றாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி நான்காம் நிலை கேமராக்கள் ஆகியவை உள்ளது. அதேபோல் 16 எம்பி செல்பி கேமரா வசதி இதில் இருக்கிறது. வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்.

ரெட்மி நோட் 9

Redmi Note 9 (Aqua Green, 4GB RAM 128GB Storage) - 48MP Quad Camera & Full HD+ Display
₹16,490.00

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.16,490-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x2340 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன்வெளிவந்துள்ளது குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஆதரவுஇருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த்
சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் 5020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 22.5வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல், எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. ப்ளூடூத் 5.0, என்எப்சி, வைஃபை 802.11,யூ.எஸ்.பி டைப்-சி, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள்
அடக்கம்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X