அமேசான்: சலுகை விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்.!
அமேசான் தளத்தில் தற்போது ஒரு சில ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ரெட்மி, சாம்சங், ரியல்மி உட்பட பல நிறுவனங்களின் சாதனங்களை சலுகை விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு அமேசான் தளத்தில் 14 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.29,999-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி
ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 2,400 X 1,080 பிக்சல் தீர்மானம், 20: 9 ஸ்க்ரீன் ரேஷியோ,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி. கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன். இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். 5ஜி,4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி/ ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். இந்த கேலக்ஸி எம்52 5ஜி சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே சிங்கிள் சார்ஜில் 48 மணிநேர டால்க் டைம் அல்லது 20 மணிநேர வீடியோ பிளேபேக் கிடைக்கும். குறிப்பாகஇந்த சாதனத்தின் எடை 173 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 10எஸ்
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அமேசான் தளத்தில் 17 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை ரூ.17,499-விலையில் வாங்க முடியும். 6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்ட ரெட்மி நோட் 10 எஸ் ஆண்ட்ராய்டு 11 உடன் இயங்குகிறது. இது 1100 நைட்ஸ் பீக் பிரைட்னெஸ், 4,500,000: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, SGS லோ ப்ளூ லைட் சான்றிதழ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G95 சிப்செட் ஆல் இயக்கப்படுகிறது. ரெட்மி நோட் 10 எஸ் ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார். போன் 13 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டருடன் துளையுடன் மையமாக அமைந்துள்ள துளை-பஞ்ச் கட்அவுட்டில் அமைந்துள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4 ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட், 5,000 எம்ஏஎச் பேட்டரி உடன் கூடிய 33W வேகமான சார்ஜிங்கைஆதரிக்கிறது.
ரெட்மி நோட் 10 லைட்
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அமேசான் தளத்தில் 17 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும்.ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் 6.67' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் DotDisplay உடன் வருகிறது. டிஸ்பிளேவைப் பத்திரமாக பாதுகாக்க இதன் மேலே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பது வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 லைட் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட் மூலம் இயங்குகிறது. ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒரு குவாட் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 48 எம்பி முதன்மை சென்சார், 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இது 4K தரத்தில் 30fps இல் வீடியோ ரெகார்டிங் ஆதரவை ஆதரிக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமரா சென்சார் 16 எம்பி லென்ஸ் உடன் வருகிறது. இது 120 எஃப்.பி.எஸ் ஸ்லோ-செல்ஃபி மோடை ஆதரிக்கிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. இது சேமிப்பு விரிவாக்கத்திற்கா மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 5,020 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. இது நோட் 9 ப்ரோவைப் போன்றது மற்றும் 18W வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இது ஆடியோவுக்கு 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் சார்ஜ் செய்வதற்கு யூஎஸ்பி டைப்-சி போர்ட்டை கொண்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 உடன் அதன் மேல் MIUI 12 இல் இயங்கக்கூடியது. கைரேகை சென்சார் ஆற்றல் பட்டனின் மேல் பக்கத்தில் உள்ளது.
சியோமி 11 லைட் 5ஜி என்இ
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி 11 லைட் என்இ 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.26,999-விலையில் வாங்க முடியும். சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-bit flat AMOLED true-colour டிஸ்பிளே
வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் வசதி ஸ்மார்ட்போனை வேகமாக செயல்பட அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெலிமேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே மொத்தம் 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4250 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டூயல் ஸ்பீக்கர் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications