அமேசான்: சலுகை விலையில் கிடைக்கும் சாம்சங், ரியல்மி, ரெட்மி ஸ்மார்ட்போன்கள்.!
அமேசான் தளத்தில் ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமேசான் தளத்தில் இந்த சிறப்பு சலுகை சில நாட்கள் வரை மட்டுமே இருக்கும். எனவே இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங், ஒன்பிளஸ், விவோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கும் சில ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ்
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.10,998-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு 19 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் ஆனது6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720×1600 பிக்சல்தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,
20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன்.சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எம்டி6765 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் One UI 3.1சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளதால்பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார்+ 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும்,
வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன்இந்த சாதனம் வெளிவந்துள்ளது. கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போனில்5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன்மாடல். டூயல்-சிம், 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், பீடோ, க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ03எஸ் ஸ்மார்ட்போன் மாடல்
ரியல்மி நார்சோ 50ஏ
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு 11 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 எனற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளதால் வீடியோ உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும். அதேபோல் ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் ஏஆர்எம் Mali-G52 GPU ஆதரவு உள்ளது.எனவே கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + black and white portrait லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் சூப்பர் நைட்ஸ்கேப், நைட் ஃபில்டர்கள், பியூட்டி மோட், எச்டிஆர், பனோரமிக் வியூ, போர்ட்ரெய்ட் மோட், டைம்லாப்ஸ், ஸ்லோ மோஷன் போன்ற கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ. ரியல்மி நார்சோ 50ஏ சாதனத்தில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல தரமான
அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். யூஎஸ்பி டைப்-சி போர்ட்இ டூயல்-பேண்ட் வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி5 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ சாதனம்.
ரெட்மி நோட் 10டி 5ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்கமுடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு 18 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம், Reading Mode 3.0, 1500: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு போன்ற பல்வேறு சிறப்பானஅம்சஙகைள கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி
சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது
ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி எம்12
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.9,499-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு
கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன். சாம்சங் கேலக்ஸி எம்12 மாடலில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 (One UI Core) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன். சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications