மொத்தமாக முடிச்சு விட்ட அமேசான்.. 10000mAh பேட்டரி.. டால்பி அட்மாஸ்.. ஆஃபரில் ரெட்மி டேப்டெல்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடைபெறும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale) எனும் சிறப்பு விற்பனையில் ரெட்மி பேட் ப்ரோ மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த டேப்லெட் 10000mAh பேட்டரி உடன் வெளிவந்தது. இப்போது இந்த சாதனத்துக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி பேட் ப்ரோ மாடலுக்கு 24 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கவிட முடியும்.

ரெட்மி பேட் ப்ரோ அம்சங்கள் (Redmi Pad Pro 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் இந்த ரெட்மி பேட் ப்ரோ வெளிவந்தது. பின்பு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மூலம் இந்த சாதனம் இயங்குகிறது.
குறிப்பாக 12.1-இன்ச் 2.5கே எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த ரெட்மி பேட் ப்ரோ வெளிவந்துள்ளது. மேலும் 2560 × 1600 பிக்சல்ஸ், 120Hzரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் சப்போர்ட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட்.
அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம். எனவே இந்த டேப்லெட் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். பின்பு 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் ப்ரோ மாடல். மேலும் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
8எம்பி ரியர் கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது ரெட்மி பேட் ப்ரோ மாடல். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. அதேபோல் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொண்டுள்ளது இந்த டேப்லெட்
தரமான டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் ப்ரோ மாடல். மேலும் இதில் குவாட் ஸ்பீக்கர்கள் வருகின்றன. குவிக் சில்வர் (Quick Silver), கிராஃபைட் கிரே (Graphite Gray) நிறங்களில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும்.
அதேபோல் 10000mAh பேட்டரி கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி பேட் ப்ரோ மாடல். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு வைஃபை 6 802.11ஏசி, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி 2.0 போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








