Home
Deal of the day

ஆர்டர் தூள் பறக்க போகுது.. 12,000mAh பேட்டரி.. 13எம்பி கேமரா.. ஆஃபரில் ரெட்மி 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி (REDMI Pad 2 Pro 5G) மாடல் தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 12000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்தது. இப்போது இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடலுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் தூள் பறக்க போகுது.. ஆஃபரில் ரெட்மி 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி அம்சங்கள் (REDMI Pad 2 Pro 5G Specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட் உடன் இந்த ரெட்மி டேப்லெட் வெளிவந்தது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 722 ஜிபியு (Adreno 722 GPU) கிராபிக்ஸ் கார்டு இதில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஹைப்பர்ஓஎஸ் 2 (HyperOS 2) மூலம் ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரெட்மி டேப்லெட்.

12.1 இன்ச் எல்சிடி(LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடல். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2560 x 1600 பிக்சல்கள், 2.5K ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 360 Hz டச் சாம்பிளிங் ரேட் , 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 600 நிட்ஸ் எச்பிஎம் (HBM) பிரைட்னஸ், டால்பி விஷன் (Dolby Vision), டிசி டிம்மிங் (DC Dimming) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடலில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். மேலும் இந்த டேப்லெட் மாடலில் டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) உள்ளன.

12,000mAh பேட்டரி உடன் ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த டேப்லெட் மாடலை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

இந்த ரெட்மி 5ஜி டேப்லெட் மாடலில் ஈசிம் சப்போர்ட் உள்ளது. மேலும் வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி பேட் 2 ப்ரோ 5ஜி மாடலில் உள்ளன. மேலும் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா உடன் இந்த அட்டகாசமான ரெட்மி டேப்லெட் வெளிவந்தது.

More from GizBot

Best Mobiles in India

English summary
REDMI Pad 2 Pro 5G with 8GB RAM is available at 15 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X