Home
Deal of the day

இப்போ ரூ.12000 பட்ஜெட்ல கிடைக்குது.. Redmi 5ஜி போன் விலை குறைப்பு.. 50MP Sony கேமரா, 5110mAh பேட்டரி, IP64!

ரெட்மி (Redmi) நிறுவனத்தின் அடுத்த ரெட்மி நோட் 15 சீரிஸ் (Redmi Note 15 Series) ஸ்மார்ட்போன்களின் அறிமுகம், விலை மற்றும் அம்சங்கள் குறித்த லீக் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகும் மறுகையில், ரெட்மி நோட் 14 சீரீஸின் (Redmi Note 14 Series) கீழ் உள்ள ஒவ்வொரு மாடலின் விலைகளும் குறைந்துகொண்டே போகிறது.

ரெட்மி நோட் 14 5ஜி மாடலை தொடர்ந்து தற்போது ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி (REDMI Note 14 SE 5G) மாடலின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.13,499 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இப்போ ரூ.12000 பட்ஜெட்ல கிடைக்குது.. Redmi 5ஜி போன் விலை குறைப்பு!

நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999 க்கு அறிமுகமானது, அதாவது ரூ.1500 நேரடி விலை குறைப்பை பெற்றுள்ளது. ஆனால் பிளிப்கார்ட் மொபைல் ஆபர் பக்கத்தில், எல்லா ஆபர்களையும் சேர்த்து இது ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் வாடிக்கையாளர்கள் ரூ.2500 வரையிலான டிஸ்கவுண்ட்டை பெறலாம்.

ரெட்மி நோட் 15 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்,
- 2160Hz டச் சாம்ப்ளிங் ரேட்
- 2100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- HDR10+ மற்றும் Dolby Vision ஆதரவு

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா
- 50 மெகாபிக்சல் Sony LYT-600 ப்ரைமரி சென்சார்
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா
- 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்

- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5110mAh பேட்டரி
- 5G, 4G, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேட்டிங்
- அளவீட்டில் 162.4x75.7x7.99மிமீ
- எடையில் 190 கிராம்

முன்னரே குறிப்பிட்டபடி ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் கடந்த 2024 இல் ரூ.17,999 என்கிற விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.1,500 குறைக்கப்பட்டு ரூ.16,499 க்கு வாங்க கிடைக்கிறது.

கூடுதலாக எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1,000 தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை ரூ.15,499 ஆக குறைக்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் மீது இஎம்ஐ சலுகைகளும் உள்ளன, மேலும் இந்த ஸ்மாட்போனை ஷாவ்மீ இந்தியா (Xiaomi India) வலைத்தளத்தில் இருந்து நேரடியாக வாங்கலாம்.

ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டியுவி ரெயிண்லேண்ட் (TUv Rheinland) சான்றிதழ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 7025 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. கூடவே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐபி64 ரேட்டிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5110mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 14 SE 5G gets Rs 2500 Price Cut in Flipkart See Original Launch Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X