பொள பொளனு ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 5110mAh பேட்டரி.. SONY கேமரா.. 12GB ரேம்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் சோனி சென்சார் கேமரா கொண்ட ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி (Redmi Note 14 SE 5G) ஸ்மார்ட்போனுக்கு டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே, பட்ஜெட்டில் களமிறங்கிய இந்த ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை மார்கெட் ரூ.14,999 ஆக இருக்கிறது. இப்போது, ரூ.2,000 நேரடி விலை குறைப்பு போக ரூ.12,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் கூடுதலாக ரூ.1,000 உடனடி டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,000 பட்ஜெட்டில் வாங்கலாம்.

இந்த உடனடி டிஸ்கவுண்ட்டை பெறுவதற்கு ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். இந்த ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனில் கிரிம்ப்சன் ஆர்ட் (Crimson Art), மிஸ்டிக் ஒயிட் (Mystic White) மற்றும் டைட்டன் பிளாக் (Titan Black) ஆகிய கலர்கள் கிடைக்கின்றன. இப்போது, கேமரா, டிஸ்பிளே, பேட்டரி போன்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி அம்சங்கள் (Redmi Note 14 SE 5G Specifications): இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7025 Ultra 6nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப ஐஎம்ஜி பிஎக்ஸ்எம்-8-256 ஜிபியு (IMG BXM-8-256 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்ட 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொடுக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப டூயல் ஸ்டீரியோ சவுண்ட் (Dual Stereo Sound) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது.
சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. மேலும், நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) மற்றும் ப்ரோ மோட் (Pro Mode) போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஏஐ பீச்சர்களும் கிடைக்கின்றன.
ஆகவே, ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ மேஜிக் ஸ்கை (AI Magic Sky) மற்றும் ஏஐ ஆல்பம் (AI AIbum) ஆகிய பீச்சர்களும் கிடைக்கின்றன. 20 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த ரெட்மி நோட் 14 எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனில் 5110mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








