தீபாவளிக்கு அள்ளி தரும் அமேசான்.. கம்மி பட்ஜெட்டில் Redmi 5ஜி போன்.. சோனி கேமரா.. எந்த மாடல்?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் தளத்தில் தற்போது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை (Great Indian Festival Sale) நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் அசத்தலான ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
அதன்படி அமேசான் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,498 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.15248 விலையில் வாங்கிவிட முடியும்.

ரெட்மி நோட் 14 5ஜி அம்சங்கள் (Redmi Note 14 5G specifications): தரமான ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா (Octa Core 6nm MediaTek Dimensity 7025 Ultra) சிப்செட் உடன் இந்த ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS)உடன் இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு 2 ஓஎஸ் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 × 2400 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. அதுவும் இந்த போன் தனித்துவமான டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் 50 எம்பி சோனி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா-வைடு + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி (சோனி எல்ஒய்டி 600 சென்சார்) கேமரா இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதுவும் ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ மேஜிக் ஸ்கை (AI Magic Sky) மற்றும் ஏஐ ஆல்பம் (AI Album) போன்ற பீச்சர்களை கொடுக்கும் சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) சப்போர்ட் இந்த போனில் உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இதில் உள்ளது.

இந்த போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் போன்ற அம்சங்களும் உள்ளன. 5110mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








