Home
Deal of the day

அமேசான்: சலுகை விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

அமேசான் தளத்தில் தற்போது ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரெட்மி, சாம்சங், ஒன்பிளஸ் போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க முடியும்.

அமேசான்: சலுகை விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

மிகவும் எதிர்பார்த்த ஐபோன் மாடல்களுக்கும் அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கும் சில அசத்தலான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10எஸ்

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்திற்கு 18 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 எஸ் ஆண்ட்ராய்டு 11 ஐ MIUI 12.5 உடன் இயங்குகிறது. இது 6.43' இன்ச் முழு எச்டி பிளஸ் 1,080 x 2,400 பிக்சல்கள் AMOLED டிஸ்ப்ளே, 1100 நைட்ஸ் பீக் பிரைட்னெஸ்,
4,500,000: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, SGS லோ ப்ளூ லைட் சான்றிதழ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G95 சிப்செட் ஆல் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் 6 ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 128 ஜிபி வரை UFS 2.2 சேமிப்பகத்துடன் வருகிறது. ரெட்மி நோட் 10 எஸ் ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ,2 மெகாபிக்சல் டெப்த் சென்சார். போன் 13 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டருடன் துளையுடன் மையமாக அமைந்துள்ள துளை-பஞ்ச்
கட்அவுட்டில் அமைந்துள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4 ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட், 5,000 எம்ஏஎச் பேட்டரி உடன் கூடிய 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.17,499-விலையில் வாங்க முடியும்.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு 13 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2,400x1,080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் ரெட்மி
நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது நான்கு பின்புற கேமராக்களுடன் வருகிறது. குவாட் கேமரா அமைப்போடு இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5 எம்பி சூப்பர் மேக்ரோ ஷூட்டர் கேமரா மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் உடன் வருகிறது. அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 5020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

நோக்கியா ஜி20

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,490-விலையில் வாங்க முடியும். மேலும் நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 20: 9 திரை விகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர வீடியோக்களை பதிவு செய்யும் போது சிறந்த ஒலி அனுபவத்திற்காக OZO ஆடியோ ஆதரவு இதில் உள்ளது. நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 4ஜி எல்டிஇ வைஃபை 802.11 பி / ஜி/ என், ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.18,999-விலையில் வாங்க முடியும்.
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் TFT இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1600 x 720 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC ப்ராசஸர் வசதி உள்ளது. குறிப்பாக கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான OneUI 3.1 கஸ்டம் ஸ்கின்
மூலம் இயங்கும் இந்த அசத்தலான கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன். இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர தனித்துவமான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது
இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன். எனவே துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க முடியும். சாம்சங் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். எனவே
பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

English summary
Redmi and Nokia smartphones available at discounted prices on the Amazon site: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X