Home
Deal of the day

புதிய ரெட்மி 9 பிரைம் வாங்க அருமையான வாய்ப்பு.. இதவிட்ட இவ்வளவு கம்மி விலையில் மீண்டும் கிடைக்காது..

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் சமீபத்தில் தனது புதிய ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் இப்போது அமேசான் நடத்தும் சிறப்பு விற்பனை திருவிழாவில், கூடுதல் சலுகையுடன் வாங்குவதற்கு கிடைக்கிறது.

புதிய ரெட்மி 9 பிரைம் வாங்க அருமையான வாய்ப்பு.. கம்மி விலையில் இப்போது

குறைந்த விலையில் சிறப்பான ஸ்மார்ட்போன் மாடலை தேர்வு செய்ய விரும்பும் பயனர்கள் இந்த புதிய சாதனத்தை தேர்வு செய்யலாம்.

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அமோக விற்பனை

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன், உங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ற ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இது 4 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்புடன் வருகிறது. இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று அதன் பெரிய பேட்டரி 5020 எம்.ஏ.எச் ஆகும். ரெட்மியிலிருந்து வரும் பிரைம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இது மிகப்பெரிய பேட்டரி என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் மற்ற ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீதும் இப்போது சிறப்பு சலுகை கிடைக்கிறது.

ரெட்மி 9 பிரைம் விலை மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட் விபரம்


ரெட்மி 9 பிரைமின் அடிப்படை வேரியண்ட் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 11, 999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அமேசான் சிறப்பு விற்பனையின் சிறப்பு தள்ளுபடியில் ஒரு பகுதியாக ரூ .9,999 என்ற விலையில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இது இப்போது 17% சலுகையுடன் உங்களுக்கு கிடைக்கிறது. அதேபோல், இதன் மற்றொரு வேரியண்ட் மாடலான 4 ஜிபி + 128 ஜிபி மாடல் வெறும் ரூ .11,999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் ப்ளூ, மிண்ட் கிரீன், சன்ரைஸ் ஃப்ளேர் மற்றும் மேட் பிளாக் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.

சியோமி ரெட்மி 9 பிரைம் பட்ஜெட் விலையை விட குறைவா?

ரெட்மி 9 பிரைமின் அனைத்து விவரக்குறிப்புகள், விலை மற்றும் கிடைக்கும் தன்மையை இப்பொழுது முழுமையாக பார்க்கலாம். சியோமி ரெட்மி 9 பிரைம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் மிரட்டலான குவாட் கேமரா அமைப்புடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் களமிறங்கியுள்ளது. இதன் முழு விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

Redmi 9 பிரைம் சிறப்பம்சம் விபரம்


6.53' இன்ச் முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உடன் அண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட டார்க் மோடு இயங்குதளம் மூலம் இயங்குகிறது. இது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட் 95 மெகா ஹெர்ட்ஸில் ஏ.ஆர்.எம் மாலி-ஜி 52 ஜிபியு 4 ஜிபி எல்பிடிடிஆர்எக்ஸ் ரேம் 128 ஜிபி சேமிப்பு மைக்ரோ எஸ்.டி ஸ்லாட்டுடன் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

Redmi 9 பிரைம் ஸ்மார்ட்போனின் கேமரா விபரம்

இந்த புதிய சாதனம் குவாட் கேமரா அமைப்பு 13 மெகா பிக்சல் AI பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 5 மெகா பிக்சில் கொண்ட மேக்ரோ கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடன் 5020 எம்ஏஎச் பேட்டரி அம்சத்துடன் வருகிறது.

பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் பயனர்கள் இப்போது இந்த புதிய ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் சாதனத்தை ஒரு முறை சிறப்பு சலுகை விலையுடன் எதிர்பார்த்திடாத மிகவும் மலிவான விலையில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள். உடனேஅமேசான் சென்று இந்த ஸ்மார்ட்போனை உங்களுடையதாக மாற்றுங்கள்.

English summary
Redmi 9 Prime Gets Best Offer On Amazon Great Indian Festival : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X