Home
Deal of the day

தரமான சரவெடி ஆபர்.. Redmi 4கே ஸ்மார்ட் டிவிக்கு நம்ப முடியாத விலை குறைப்பு.. எந்த மாடல்?

தீபாவளியை முன்னிட்டு அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரெட்மி 43 இன்ச் எப் சீரிஸ் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி (Redmi 43 inch F Series Ultra HD 4K LED Smart Fire TV) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி டால்பி ஆடியோ, குவாட் கோர் பிராசஸர், 8ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது அமேசான் தளத்தில் ரெட்மி 43 இன்ச் எப் சீரிஸ் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.3000 உடனடி தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ரெட்மி டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

Redmi 4கே ஸ்மார்ட் டிவிக்கு நம்ப முடியாத விலை குறைப்பு.. எந்த மாடல்?

ரெட்மி 43 இன்ச் எப் சீரிஸ் 4கே டிவி அம்சங்கள் (Redmi 43 inch F Series 4K Smart Fire TV Specifications): தரமான குவாட் கோர் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ55 ( Quad core ARM Cortex-A55) பிராசஸர் உடன் ரெட்மி 43 இன்ச் எப் சீரிஸ் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெசல் லெஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த ரெட்மி டிவி. 4கே டிஸ்பிளே (4K display) உடன் இந்த ரெட்மி 43 இன்ச் எப் சீரிஸ் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

விவிட் பிக்சர் இன்ஜின் (Vivid Picture Engine), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடலில் உள்ளன.

ஃபயர் ஓஎஸ் 7 (Fire TV OS 7) மூலம் இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடல் இயங்கும். பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 12,000க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது.

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் (DTS: Virtual X) போன்ற ஆடியோ அம்சங்களைக் கொண்ட 24W ஸ்பீக்கர்கள் உடன் இந்த ரெட்மி டிவி வெளிவந்துள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் மியூசிக்கிற்கான ஷார்ட்கட் பட்டன்கள் கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே 43 இன்ச் மாடல் வெளிவந்துள்ளது. வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 43 inch F Series 4K Smart Fire TV gets 50 percent discount in Amazon Festival Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X