Home
Deal of the day

வெறும் ரூ.9,099 க்கு கிடைக்கும் Redmi-யின் முரட்டு 5G போன்.. கண்ண மூடிக்கிட்டு வாங்க 5 காரணங்கள்.. எந்த மாடல்?

கடந்த 2024 ஆம் ஆணு முழுவதும் நல்ல விற்பனையை சந்தித்த பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை எடுத்து பார்த்தால்.. அதில் ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) மாடல் நிச்சயமாக இருக்கும். 2024 ஆம் ஆண்டின் பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போனாக இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்ட இது 2023 டிசம்பரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்றும் கூறலாம்.

தற்போது இந்த ஸ்மார்ட்போன், அமேசான் இந்தியா வலைதளத்தில் தள்ளுபடி விலையின்கீழ் விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை என்ன? தற்போது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? 1 ஆண்டு பழைய மாடலான இதை 2025 இல் நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:

வெறும் ரூ.9,099 க்கு கிடைக்கும் Redmi-யின் முரட்டு 5G போன்!

ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை VS அமேசான் ஆபர் விலை? அறிமுகமான போது இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைத்தது. பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.10,999 க்கும் , 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன்கள் முறையே ரூ.12,499 க்கும் மற்றும் ரூ.14,499 க்கும் வாங்க கிடைத்தது

தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக ரூ.9,099 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது அசல் அறிமுக விலையில் இருந்து ரூ.1,900 நேரடி தள்ளுபடியை பெற்று, ஆபர் விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

1 ஆண்டு பழைய மாடலான ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனை 2025 இல் நம்பி வாங்கலாமா? இப்போதும் கூட இந்த ஸ்மார்ட்போனை ஏன் வாங்கலாம் என்கிற 5 காரணங்களை எங்களால் முன்வைக்க முடியும். முதல் காரணம் - ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது விலையை மீறிய டிசைனை பெற்றுள்ளது.

ரெட்மி 13சி 5ஜி பார்ப்பவர்களை ஈர்க்கும் பேக் பேனல் டிசைனை கொண்டுள்ளது. இதன் மீது வெளிச்சம் அல்லது ஒளி படும்போதும், இது பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தின் பல்வேறு ஷேட்களை பிரதிபலித்து பளபளப்பான வடிவங்களையும், எபெக்ட்களையும் உருவாக்குகிறது. மிகவும் முக்கியமாக ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்லிம் மற்றும் லைட் வெயிட் ஆக உள்ளது.

இரண்டாவது காரணம் - ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனின் பெரிய டிஸ்பிளே. இது 6.74-இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை வழங்குகிறது. கூடவே இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடனும் வருகிறது. இந்த "கூட்டணி" ஸ்மூத் ஆன ஸ்க்ரோலிங் மற்றும் நேவிகேட்டிங் அனுபவத்தை வழங்குகிறது.

மூன்றாவது காரணம் - ரெட்மயோ 13சி 5ஜி ஸ்மார்ட்போனின் பெர்ஃபார்மென்ஸ். இந்த ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த செயல்திறன் திருப்திகரமாக உள்ளது. சோஷியல் மீடியா ஆப்களை ஸ்க்ரோலிங் செய்தல், வாட்ஸ்அப்பில் சாட் செய்தல் மற்றும் வீடியோக்களை பார்ப்பது போன்ற அடிப்படை பணிகளில் எந்த சிக்கலும், பின்னடைவும் இருக்காது.

நான்காவது காரணம் - நல்ல பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமான பயன்பாட்டின் போது, பெரும்பாலும் நாள் முழுவதும் நீடிக்கிறது. கூடவே இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. இருப்பினும் ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் உள்ள சார்ஜர் 10W திறனுடன் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது காரணம் - நல்ல லைட்டிங்கில் நல்ல அவுட்புட்களை வழங்கும் கேமராக்களை கொண்டுள்ளது. ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா உள்ளது. இது நல்ல லைட்டிங்கில் விரிவான மற்றும் வண்ணமயமான காட்சிகளை வழங்குகிறது. இருப்பினும் இதை பெஸ்ட் கேமரா செட்டப் அல்லது நல்ல ஆல்-ரவுண்ட் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது என்று வாக்குறுதி கொடுக்க முடியாது. ரூ.9000 பட்ஜெட்டிற்கு ஏற்றது என்று வேண்டுமானால் கூறலாம்.

English summary
Redmi 13C 5G Gets Discount in Amazon India This 1 Year Old Phone Now Available For Rs 9099
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X