அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரியல்மி ஸ்மார்ட்போன்கள்.!
ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இந்நிறுவனம் விரைவில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரியல்மி நார்சோ 50ஏ
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,499-விலையில் வாங்க முடியும். ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 எனற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ரியல்மி நார்சோ 50ஏ
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் ஏஆர்எம் Mali-G52 GPU ஆதரவு உள்ளது. எனவே கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + black and white portrait லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன். மேலும் சூப்பர் நைட்ஸ்கேப், நைட் ஃபில்டர்கள், பியூட்டி மோட், எச்டிஆர், பனோரமிக் வியூ, போர்ட்ரெய்ட் மோட், டைம்லாப்ஸ், ஸ்லோ மோஷன் போன்ற கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ. ரியல்மி நார்சோ 50ஏ சாதனத்தில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல தரமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
ரியல்மி நார்சோ 30
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.15,499-விலையில் வாங்க முடியும். ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1080 x2400 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 90.5 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம், 405 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 580 நிட்ஸ் பிரைட்நஸ் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நார்சோ 30 சாதனம். ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த நார்சோ 30 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும்செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நார்சோ 30ஸ்மார்ட்போன் மாடல். ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் 3.5மிமீ ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 801.11, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.
ரியல்மி சி 25 ஒய்
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி 25 ஒய் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,498-விலையில் வாங்க முடியும். Realme C25Y சாதனம் டூயல் நானோ சிம் உடன் வருகிறது. ரியல்மி சி 25 ஒய் ஆண்ட்ராய்டு 11 உடன் ரியல்மி ஆர் பதிப்பு இன்டர்பேஸ் விருப்பத்துடன் இயங்குகிறது. இது 6.5' இன்ச் எச்டி பிளஸ் கொண்ட 720 x 1,600 பிக்சல் உடன் 20: 9 விகித விகிதம் மற்றும் 420 நிட் உச்ச பிரகாசத்தைக் கொண்ட டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் யுனிசாக் T610 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்காக
Realme C25Y மூன்று பின்புற கேமரா அமைப்பை வழங்குகிறது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் f1.8 லென்ஸுடன், 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் f/2.4 லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது. பின்புற கேமரா AI பியூட்டி, HDR பயன்முறை, பனோரமிக் வியூ, போர்ட்ரேட், டைம்லாப்ஸ், போன்ற அம்சங்களுடன் ஃபில்டர்களை ஆதரிக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு, Realme C25Y முன்புறத்தில் f/2.0 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. முன்பக்க கேமராவில் AI பியூட்டி அம்சமும் உள்ளது. இந்த சாதனம் 4ஜி LTE, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் v5, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போர்டில் உள்ள சென்சார்களில் ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது.
ரியல்மி C21Y
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி C21Y ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.8,990-விலையில் வாங்க முடியும்.ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ரியல்மி C21Y ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc T610 SoC சிப்செட் வசதி உள்ளது. மேலும் Realme UI சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.ரியல்மி C21Y சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் மாடல். ரியல்மி C21Y ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு
வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.0,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி C21Y ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications