Home
Deal of the day

அமேசான்: தரமான அம்சங்களுடன் கிடைக்கும் அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன்கள்.!

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருகின்றன என்றுதான் கூறவேண்டும்.

தரமான அம்சங்களுடன் கிடைக்கும் அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன்கள்.!

அதேபோல் ரியல்மி நிறுவனம் அடுத்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம்; செய்ய திட்டமிட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது அமேசான் தளத்தில் தரமான அம்சங்களுடன் கிடைக்கும் ரியல்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 30

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.15,499-விலையில் வாங்க முடியும். ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1080 x2400 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 90.5 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம், 405 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும்
580 நிட்ஸ் பிரைட்நஸ் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நார்சோ 30 சாதனம். ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த நார்சோ 30 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ரியல்மி நார்சோ 30
ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நார்சோ 30ஸ்மார்ட்போன் மாடல். ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் 3.5மிமீ ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ,
வைஃபை 801.11, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

ரியல்மி 5 ப்ரோ

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உள்ளடக்க மெமரி வசதி ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,990-ஆக உள்ளது. குறிப்பாக 6.3' இன்ச் முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா க்ளாஸ் 3 ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார்,16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா,
VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங், 4,035 எம்.ஏ.எச் பேட்டரி என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி 5 ப்ரோ மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரியல்மி 8

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.18,499-விலையில் வாங்க முடியும். பின்பு 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். 1,080x 2,400 பிக்சல் தீர்மானம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90.8 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம், 1,000 nits பிரைட்நஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி பிளாக் அண்ட் ஒயிட் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும்
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி 8 ஸ்மார்ட்போன் மாடல். ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன்

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.22,990-விலையில் வாங்க முடியும். 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்,குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 எஸ்ஒசி சிப்செட், Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4300 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடல். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
மேலும் Cosmos Blue, Luna White, Voyager Grey நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

English summary
Realme smartphones available at discounted prices on the Amazon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X