அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரியல்மி ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!
ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான சிப்செட் வசதி, அசத்தலான கேமராக்கள் எனப் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் இந்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ரியல்மி நிறுவனம். இப்போது பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரியல்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
ரியல்மி நார்சோ 50ஏ
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,499- விலையில் வாங்க முடியும். மேலும் ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 எனற திரைவிகிதம், மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் ஏஆர்எம் Mali-G52 GPU ஆதரவு, Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல தரமான அம்சங்களை கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 50ஏ. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + black and white portrait லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ
ஸ்மார்ட்போன். குறிப்பாக யூஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல்-பேண்ட் வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி5 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ சாதனம்.
ரியல்மி நார்சோ 50ஐ
2ஜிபிரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.7,499-விலையில் வாங்க முடியும். 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர் ப்ரசாஸர் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ சாதனம். குறிப்பாக யூஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி4.2 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ சாதனம்.
ரியல்மி சி 25 ஒய்
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி 25 ஒய் ஸ்மார்ட்போனை ரூ.11,698-விலையில் வாங்க முடியும். ரியல்மி ஸ்மார்ட்போனின் Realme C25Y சாதனம் டூயல் நானோ சிம் உடன் வருகிறது. ரியல்மி சி 25 ஒய் ஆண்ட்ராய்டு 11 உடன் ரியல்மி ஆர் பதிப்பு இன்டர்பேஸ் விருப்பத்துடன் இயங்குகிறது. இது 6.5' இன்ச் எச்டி பிளஸ் கொண்ட 720 x 1,600 பிக்சல் உடன் 20: 9 விகித விகிதம் மற்றும் 420 நிட் உச்ச பிரகாசத்தைக் கொண்ட டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் யுனிசாக் T610 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்காக Realme C25Y மூன்று பின்புற கேமரா அமைப்பை வழங்குகிறது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் f1.8 லென்ஸுடன், 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் f/2.4 லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
வழங்கப்பட்டுள்ளது. பின்புற கேமரா AI பியூட்டி, HDR பயன்முறை, பனோரமிக் வியூ, போர்ட்ரேட், டைம்லாப்ஸ், போன்ற அம்சங்களுடன் ஃபில்டர்களை ஆதரிக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு, Realme C25Y முன்புறத்தில் f/2.0 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. முன்பக்க கேமராவில் AI பியூட்டி அம்சமும் உள்ளது. இணைப்பு விருப்பங்களில் இந்த சாதனம் 4ஜி LTE, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் v5, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது
ரியல்மி 9ஐ
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.15,999- விலையில் வாங்க முடியும். ரியல்மி 9ஐ ஆனது ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் ரியல்மி யுஐ 2.0 ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,412 பிக்சல்கள்) டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது. மேலும் இந்த டிஸ்ப்ளே டிராகன் டிரெயில் ப்ரோ கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி, அட்ரினோ 610 ஜிபியு வசதியோடு வருகிறது. இது டைனமிக் ரேம் விரிவாக்க வசதியையும் கொண்டுள்ளது. ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் முதன்மை சாம்சங் சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. அதேபோல் கேமரா அமைப்பில் 2 மெகாபிக்சல்போர்ட்ரெய்ட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் வசதியைக் கொண்டிருக்கிறது. ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்471 செல்பி கேமரா வசதி இருக்கிறது. ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 லாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த
சாதனத்தி பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை 70 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications