விட்ராதீங்க ப்ரோ.. ஆஃபர் ரேட்டில் 12200mAh பேட்டரி பேட்.. 45W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஆஃபர் விலையில் பேட் மாடல்களை வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் ரியல்மி பேட் 3 (Realme Pad 3) மாடல் பக்காவாக தேர்வாக இருக்கும். வை-பை ஒன்லி மாடலுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. பெரிய பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இருப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்திய மார்கெட்டில் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் வரவேற்பை போலவே பேட் மாடல்களுக்கும் கிடைக்கிறது. ஏனென்றால், பெரிய பேட்டரி, பெரிய டிஸ்பிளே, குவாட் ஸ்பீக்கர்கள் போன்ற பீச்சர்களுடன் ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப கிடைக்கின்றன. இதில் ரியல்மி பேட் 3 அறிமுகத்தின் போதே கேமிங் பிரியர்களிடையே வரவேற்பு பெற்றது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ரியல்மி பேட் 3 மாடலின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆக இருக்கிறது. 20 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு இந்த விலைக்கு கிடைக்கிறது. மேலும், பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருந்தால் ரூ.1,400 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
ஆகவே, ரூ.26,599 விலைக்கு இந்த ரியல்மி பேட் 3 மாடலை வாங்கி கொள்ளலாம். இதில் 5ஜி மாடலும் கிடைக்கிறது. ஆனால், இந்த தள்ளுபடியானது வை-பை ஒன்லி (Wi-Fi Only) மாடலுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஸ்பேஸ் கிரே (Space Grey) மற்றும் ஷேம்பெயின் கோல்டு (Champagne Gold) ஆகிய கலர்களில் இந்த ரியல்மி பேட் 3 மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது.
புக் வியூ மாடலாக இருக்கிறது. ஆகவே, வெறும் 6.6 எம்எம் தடிமன் மட்டுமே கொடுக்கிறது. அல்ட்ரா ஸ்லிம் பாடி கிடைப்பதால், ஹேண்டில் செய்ய சுலபமாக இருக்கும். ஏஐ ரெக்கார்டிங் சம்மரி (AI Recording Summary), ஏஐ டாகுமெண்ட் (AI Documents), கூகுள் ஜெமினி (Google Gemini) உள்ளிட்ட பீச்சர்களையும் இந்த ரியல்மி பேட் 3 மாடல் கொடுத்து இருக்கிறது.
ரியல்மி பேட் 3 அம்சங்கள் (Realme Pad 3 Specifications): 11.61 இன்ச் (2800 x 2000 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி பேட் 3 கொடுக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 500 நிட்ஸ் பீக் பிரைட்னல் மற்றும் 296 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. மேலும், 96 சதவீத கலர் காமட் மற்றும் 1.07 பில்லியர் கலர் டெப்த் வருகிறது.
மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 மேக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Max 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கொண்ட மாடலாக இந்த ரியல்மி பேட் 3 இருக்கிறது.
8 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 12200mAh பேட்டரி கிடைக்கிறது. குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 578 கிராம் எடை கொண்ட மாடலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications