ஆர்டர் போடுறவங்க அதிர்ஷ்டசாலி.. அதிரடி ஆபர் விலையில் 7000mAh பேட்டரி Realme 5ஜி போன்!
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் நடக்கும் பிக் பெஸ்டிவ் தமாகா (Big Festive Dhamaka) விற்பனையில் 7000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது "டாப் டிஸ்கவுண்ட் ஆப் தி சேல்" (Top Discount Of The Sale) என்கிற டேக்லைனுடன் நல்ல ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
அது ரியல்மி பி4 ப்ரோ 5ஜி (Realme P4 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது பிளிப்கார்ட்டில் இது எம்ஆர்பி ரூ.30,999 க்கு பதிலாக ரூ.6000 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும்.

ரியல்மி பி4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.8-இன்ச் FHD+ AMOLED 4D கர்வ் பிளஸ் டிஸ்பிளே
- 1080 × 2800 பிக்சல்ஸ்
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 6500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்
- 12GB வரை LPDDR4X ரேம்
- 256GB வரை UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Realme UI 6 ஓஎஸ்
- AI ஆதரவு உடனான ஹைப்பர் விஷன் சிப்செட்
- வெப்ப மேலாண்மைக்காக 7000 சதுர மிமீ ஏர்ஃப்ளோ விசி (வேப்பர் சேம்பர்) கூலிங் சிஸ்டம்
- AI லேண்ட்ஸ்கேப், AI ஸ்னாப் மோட், AI பார்ட்டி மோட் மற்றும் AI டெக்ஸ்ட் ஸ்கேனர் உட்பட பல ஏஐ அம்சங்களை கொண்டு உள்ளது.
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் சோனி IMX896 பிரைமரி சென்சார்
- 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் OV50D செல்பீ சென்சார்
- முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டும் 60fps இல் 4K வீடியோ ரெக்கார்ட் செய்யும்
- 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
-10W ரிவர்ஸ் சார்ஜிங்
- 7000mAh பேட்டரி
- 5ஜி,4ஜி
- வைஃபை 6
- ப்ளூடூத் 5.4
- ஜிபிஎஸ்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 மற்றும் IP66 ரேட்டிங்
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 7.68 மிமீ
- எடையில் 187 கிராம்
விரைவில் 7000mAh பேட்டரி, 120W சார்ஜிங் உடன் இன்னொரு புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவுளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அது ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போன் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் பெரிய 7,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மற்ற அம்சங்களை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 200 மெகாபிக்சல் 1/1.56-இன்ச் சாம்சங் எச்பி5 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் பொருத்தப்பட்டிருக்கும் என்று ரியல்மி துணைத்தலைவர் சூ குய் சேஸ் (Xu Qi Chase) தெரிவித்துள்ளார். இதன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் 50-மெகாபிக்சல் 1/1.4-இன்ச் சோனி LYT-808 ப்ரைமரி (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) மற்றும் 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸும் இடம்பெறலாம்
ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன்டர்சேஞ்சபிள் ரியர் கேமரா யூனிட், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 2கே 10-பிட் LTPO BOE பிளாட் OLED டிஸ்பிளே ஆகிய அம்சங்களும் ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








