ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.2000 விலை குறைந்து அடிமட்ட விலைக்கு 6000mAh பேட்டரி கொண்ட Realme 5ஜி போன்!
ரியல்மி (Realme) நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆக ரியல்மி (Realme P4x 5G) மாடல் இந்தியாவில் அறிமுகமான வேகத்தில் முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டு இருந்த ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3x 5G) ஸ்மார்ட்போனின் விலை குறைந்துள்ளது.
அறிமுகத்தின் போது ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வாங்க கிடைத்தது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.2000 நேரடி விலைக்குறைப்பை பெற்று (அதாவது எந்த பேங்க் டிஸ்கவுண்டும் இல்லாமலேயே) ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இதேபோல ரூ.14,999 க்கு அறிமுகமான ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் அந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு பின்னர் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மீதும் ரூ.2000 விலை குறைப்பு கிடைக்கிறது.
ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.7-இன்ச் FHD+ (1080 x 2400 பிக்சல்ஸ்) LCD டிஸ்பிளே
- 8GB வரை RAM மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் (MediaTek Dimensity 6400 SoC)
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
- முன்பக்கத்தில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- 6,000mAh பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங்
புதிய ரியல்மி பி4எக்ஸ் 5ஜி விலை, விற்பனை, சலுகைகள்: இந்தியாவில் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷன் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் முறையே ரூ.16,999 மற்றும் ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.
இருப்பினும் அறிமுக சலுகையாக ()விற்பனை தொடங்கிய சில மணி நேரத்திற்கு மட்டும்) பேஸிக் ஆப்ஷன் ரூ.13,499 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்று ரியல்மி அறிவித்துள்ளது. இது மேட் சில்வர், எலிகண்ட் பிங்க் மற்றும் லேக் கிரீன் ஆகிய 3 கலர்களில் பிளிப்கார்ட் (Flipkart)வழியாக டிசம்பர் 10 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும்.
ரியல்மி பி4எக்ஸ் 5ஜி விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ+நானோ) ஆதரவுடன் வரும் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரியல்மி யுஐ 6.0 கொண்டு இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் புல் எச்டி எல்சிடி பேனலை கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 1,000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸை வழங்கும் என்று கூறப்படுகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 18ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம்-ஐயும் வழங்குகிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் ஸ்டோரேஜை 2டிபி வரை விரிவாக்கும் ஆதரவையும் கொண்டுள்ளது
கேமராக்களை பொறுத்தவரை ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் உள்ளன. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு இது 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டட் கட்டமைப்பு உள்ளது. மேலும் இது எஃகு தகடு மற்றும் காப்பர்-கிராஃபைட் பூச்சுடன் 5300 மிமீ சதுர வேப்பர் சேம்பர் கொண்ட ப்ரோசன் கிரவுன் கூலிங் சிஸ்டம் கொண்டது. பேட்டரியை பொறுத்தவரை இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆனது பைபாஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. கனெக்ட்விட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது ப்ளூடூத், 5ஜி, 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் வைஃபை ஆகியவைகளை கொண்டுள்ளது.. இது டூயல் ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. கடைசியாக இது அளவீட்டில் 8.39 மிமீ தடிமன் மற்றும் எடையில் 208 கிராம் உள்ளது.


Click it and Unblock the Notifications








