Home
Deal of the day

ஆளுக்கு 1 ஆர்டர்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் ரியல்மி பி3 5ஜி (Realme P3 5G) ஸ்மார்ட்போன் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி பி3 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.800 வரை தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆளுக்கு 1 ஆர்டர்.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி பி3 5ஜி அம்சங்கள் (Realme P3 5G Specifications): ரியல்மி பி3 5ஜி போன் 6.67 இன்ச் புல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2400 ×1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட் உடன் இந்த ரியல்மி பி3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியுடன் ரியல்மி பி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.ஜிடி பூஸ்ட் (GT Boost), ஏஐ அல்ட்ரா டச் கன்ட்ரோல் (AI Ultra Touch Control), ஏஐ மோஷன் கன்ட்ரோல் (AI Motion Control) போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது.

ரியல்மி பி3 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா உடன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளன.

6000mAh பேட்டரி வசதியுடன் ரியல்மி பி3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். இதுதவிர ரியல்மி பி3 5ஜி போனின் பேட்டரிக்கு ஏரோ ஸ்பேஸ் கூலிங் சிஸ்டம் (Aerospace Cooling System) சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது ரியல்மி பி3 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். அதாவது நீஙகள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme P3 5G with 6000mAh battery available at 20 percent discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X