Home
Deal of the day

அடிமட்ட விலை குறைப்பில் Realme போன்.. 5ஜி, 6000mAh பேட்டரி, ஐபி64, கூகுள் ஜெமினி.. எந்த மாடல்?

ஏற்கனவே ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட் விலையில் அறிமுகமான ஒரு 6000mAh பேட்டரி ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் மீது ரூ.4,250 தள்ளுபடி / விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு, தற்போது அது சூப்பர் பட்ஜெட் பிரிவிற்குள் (ரூ.10,000-ஐ சுற்றிய விலைக்கு) இறங்கி உள்ளது. எங்கே? என்ன மாடல்? என்னென்ன அம்சங்கள்?

நாம் இங்கே பேசுவது ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை பற்றித்தான். அமேசான் இந்தியா வலைதளத்தில் தற்போது இந்த ஸ்மார்ட்போன், அதன் எம்ஆர்பி விலையான ரூ.14,999 க்கு பதிலாக ரூ.4,250 தள்ளுபடி / விலை குறைப்பை பெற்று ரூ.10,749 க்கு வாங்க கிடைக்கிறது. இது கூப்பன் ஆபர் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட்டை உள்ளடக்கிய விலை ஆகும்.

அடிமட்ட விலை குறைப்பில் Realme போன்.. எந்த மாடல்?

இதேபோல ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி வேரியண்ட் மீதும் டிஸ்கவுண்ட் / விலைகுறைப்பு கிடைக்கிறது. அமேசான் இந்தியா வலைதளத்தில் தற்போது இந்த ஸ்மார்ட்போன், அதன் அசல் அறிமுக விலையான ரூ.9999 க்கு பதிலாக ரூ.3,200 தள்ளுபடி / விலை குறைப்பை பெற்று ரூ.6,799 க்கு வாங்க கிடைக்கிறது. இது கூப்பன் ஆபர் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட்டை உள்ளடக்கிய விலை ஆகும்.

எந்த ஆபரும் இல்லாமல் ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி மீது நேரடி விலைகுறைப்பும் கிடைக்கிறது. அமேசானில் ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9999 க்கு பதிலாக ரூ.7,299 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.2700 நேரடி விலைக்குறைப்பையும் பெற்றுள்ளது.

ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: - மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட்- 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் - 32 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா - MIL-STD-810H இராணுவ-தர நீடித்துழைப்பு சான்றிதழ் (Military-grade durability certification) - 6300mAh பேட்டரி

ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை முன்னரே குறிப்பிட்டபடி இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் உடன் வருகிறது. இது 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 15 (Android 15) ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) உடன் வருகிறது மற்றும் கூகுள் ஜெமினி (Google Gemini) ஒருங்கிணைப்பையும் வழங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை இது ஒரு செவ்வக வடிவிலான ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. அதில் ஆட்டோஃபோகஸ் ஆதரவுடன் 32-மெகாபிக்சல் GC32E2 ப்ரைமரி சென்சார் உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ஒரு டேப்லெட் வடிவ எல்இடி ஃபிளாஷ் யூனிட்டும் உள்ளது. இதன் கேமரா ஆப்பில் ஏஐ-பேக் இமேஜிங் மற்றும் ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face) போன்ற எடிட்டிங் அம்சங்களும் உள்ளன

பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை இது 15W வயர்டு மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது டூயல் 5ஜி சிம் இணைப்பை ஆதரிக்கிறது. மேலும் இது தூசி மற்றும் தெறிப்பு எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்கையும், இராணுவ தர MIL-STD-810H அதிர்ச்சி எதிர்ப்பு சான்றிதழையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 7.94 மிமீ தடிமனும் மற்றும் 197 கிராம் எடையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 80 Lite 5G Selling At Under 7000 Discounted Price in Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X