ஆள் ஆளுக்கு அள்ளுறாங்களே.. ரூ.6000 பட்ஜெட்டுக்கு இறங்கிய Realme-யின் 6300mAh பேட்டரி போன்!
ரூ.13,000 பட்ஜெட்டில் ரியல்மி (Realme) நிறுவனத்தின் புதிய ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (RealmeP4x 5G) ஸ்மார்ட்போன் அறிமுகமான வேகத்தில் 6300எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.6000 பட்ஜெட்டிற்கு வந்துள்ளது.
அது ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி (Realme NARZO 80 Lite 4G) ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, அதன் எம்ஆர்பி விலையான ரூ.8,999 க்கு பதிலாக ரூ.6,799 க்கு வாங்க கிடைக்கிறது.

சுவாரசியமாக இதே ஸ்மார்ட்போனில் 5ஜி வேரியண்ட்டும் உள்ளது. அதாவது ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி மாடலும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் அமேசான் இந்தியாவில் ரூ.10,498 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை முன்னரே குறிப்பிட்டபடி இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் உடன் வருகிறது. இது 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 15 (Android 15) ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) உடன் வருகிறது மற்றும் கூகுள் ஜெமினி (Google Gemini) ஒருங்கிணைப்பையும் வழங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை இது ஒரு செவ்வக வடிவிலான ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. அதில் ஆட்டோஃபோகஸ் ஆதரவுடன் 32-மெகாபிக்சல் GC32E2 ப்ரைமரி சென்சார் உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ஒரு டேப்லெட் வடிவ எல்இடி ஃபிளாஷ் யூனிட்டும் உள்ளது. இதன் கேமரா ஆப்பில் ஏஐ-பேக் இமேஜிங் மற்றும் ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face) போன்ற எடிட்டிங் அம்சங்களும் உள்ளன.
பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை இது 15W வயர்டு மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது டூயல் 5ஜி சிம், தூசி மற்றும் தெறிப்பு எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங், இராணுவ தர MIL-STD-810H அதிர்ச்சி எதிர்ப்பு சான்றிதழையும் கொண்டுள்ளது.
டிசம்பர் 10 முதல் விற்பனைக்கு வரும் புதிய ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்தியாவில் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதே ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷன் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் முறையே ரூ.16,999 மற்றும் ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. இருப்பினும் அறிமுக சலுகையாக பேஸிக் ஆப்ஷன் ரூ.13,499 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்று ரியல்மி அறிவித்துள்ளது. விற்பனை வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் (Flipkart) தொடங்கும். ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்களை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.
https://tamil.gizbot.com/mobile/realme-p4x-5g-with-7000mah-battery-18gb-virtual-ram-launched-india-price-specs-sale-december-10-063487.html


Click it and Unblock the Notifications








