Home
Deal of the day

வந்து 3 மாசம் தான் ஆகுது.. லேட்டஸ்ட் Realme 5G போன் மீது ரூ.2500 டிஸ்கவுண்ட்.. Amazon-ல் ஆர்டர் அள்ளுது!

கடந்த 2024 செப்டம்பரில், ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமான ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி (Realme NARZO 70 Turbo 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் ரூ.15,000 க்குள் என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.

அறிமுகத்தின் போது ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்று இருந்தது. தற்போது இதே ஸ்டோரேஜ் ஆப்ஷனின் டர்போ பர்பில் கலர் ஆப்ஷன் ரூ.2500 கூப்பன் டிஸ்கவுண்ட்டை பெற்று ரூ.14,498 க்கு வாங்க கிடைக்கிறது.

லேட்டஸ்ட் Realme 5G போன் மீது ரூ.2500 டிஸ்கவுண்ட்!

அமேசான் வலைத்தளத்தில் ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,998 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கூடவே ரூ.2500 கூப்பன் டிஸ்கவுண்ட்டும் கிடைக்கிறது. இதை அப்ளை செய்யும் பட்சத்தில், ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி மாடலை ரூ.14,498 க்கு, அதாவது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க முடியும்.

ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டூயல் சிம் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சாம்சங் E4 OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது ரியல்மி நிறுவனம் இந்த டிஸ்பிளேவை "OLED Esports டிஸ்பிளே" என்று அழைக்கிறது.

ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி 5ஜி சிப்செட் உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது AI ஆதரவு கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உடன் வரும் ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த பாஸ்ட் சார்ஜிங் அம்சம் ஆனது வெறும் 30 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 50% வரை பேட்டரியை நிரப்பும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.

ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி தவிர்த்து, அமேசான் இந்தியா வலைத்தளத்தில், ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீதான ஒரு பிரத்யேக விற்பனையும் நடக்கிறது. இதன்கீழ் வேறு சில ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீதும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) மீது ரூ.3000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வங்கி சலுகைகள் உட்பட ரூ.56,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ என்61 (Realme Narzo N61) மீது ரூ.1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் வங்கி சலுகைகள் உட்பட ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T) மீது ரூ.7000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் வங்கி சலுகைகள் உட்பட ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி 70எக்ஸ் 5ஜி (Realme 70x 5G) மீது ரூ.1750 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் வங்கி சலுகைகள் உட்பட ரூ.11,249 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி நார்சோ என்65 (Realme Narzo N65) மீது ரூ.1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் வங்கி சலுகைகள் உட்பட ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.

English summary
Realme NARZO 70 Turbo 5G Selling At Lowest Price Ever in Amazon India Check Offer Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X