முரட்டு ஆஃபரில் ரியல்மி.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 120W பாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரிகோ ஜிஆர் கேமரா சிஸ்டம், 200 எம்பி அல்ட்ரா கிளாரிட்டி டெலிபோட்டோ, 7000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் அமோலெட் டிஸ்பிளே போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் களமிறங்கிய ரியல்மி ஜிடி 8 ப்ரோ (realme GT 8 Pro) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.72,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.69,999 விலைக்கு இந்த ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். டைரி ஒயிட் (Diary White) மற்றும் அர்பன் ப்ளூ (Urban Blue) கலர்களில் கிடைக்கிறது.

ஸ்விட்ச் டிசைன் கேமரா (Switch Design Camera)
ஸ்குவார் (Square), சர்க்கிள் (Circle), ரோபாட் (Robot) ஆகிய டிசைன்களில் கேமரா பம்ப் கிடைக்கிறது. இதை கலட்டி மாட்டி கொள்ள முடியும். பேக் பேனலில் பேப்பர் லைக் லெதர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆகவே, வியர்-ரெசிஸ்டன்ட் (Wear Resistant) எதிர்பார்க்க முடிகிறது. போட்டோனிக் நானோ கார்விங் (Photonic Nano-Carving), யுனிக் பேப்பர் டெக்ச்சர் (Unique Paper Texture) உள்ளது.
மேட் மெட்டல் ஃபிரேம் (Matte Metal Frame) மற்றும் பிளாட் ஸ்கிரீன் (Flat Screen) கிடைத்துள்ளது. 214 கிராம் எடை கொடுத்து உள்ளது. பெரிய பேட்டரி கிடைப்பதால், 8.2 எம்எம் தடிமன் உள்ளது. IP69 + IP68 + IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) கொண்ட மாடலாக இந்த ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ள கிடைக்கிறது.
ரிகோ ஜிஆர் கேமரா சிஸ்டம்
இந்த ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனானது ரிகோ ஜிஆர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. ரிகோ ஜிஆர் ஃபிலிம் டோன் (RICOH GR Film Tone), பாசிடிவ் ஃபிலிம் (Positive Film), நெகடிவ் ஃபிலிம் (Negative Film), ஹை-கான்ட்ராஸ்ட் பி&டபுள்யூ (Hi-Contrast B&W), மோனோடோன் (Monotone), ரிகோ ஜிஆர் ரெசிபி (RICOH GR Recipe) கிடைக்கிறது.
மேலும், ஸ்னாப் போகஸ் மோட் (Snap Focus Mode), ரிகோ ஜிஆர் வாட்டர்மார்க் (RICOH GR Watermark) கிடைக்கிறது. 200 எம்பி அல்ட்ரா கிளியர் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுத்து உள்ளது.
4K டால்பி விஷன் ரெக்கார்டிங், 8K 30fps ரெக்கார்டிங் கொடுத்து உள்ளது. மேலும், 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. 6X லாஸ்லெஸ் ஜூமிங் மற்றும் 120X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து உள்ளது. இதிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இப்போது, டிஸ்பிளே, பேட்டரி போன்ற பீச்சர்களை பார்க்கலாம்.
ரியல்மி ஜிடி 8 ப்ரோ அம்சங்கள் (realme GT 8 Pro Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட்டை இந்த ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) மற்றும் ஆர்1 கிராபிக்ஸ் சிப் (R1 Graphics Chip) கொடுக்கப்பட்டு உள்ளது.
6.79 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 7000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








