வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரியல்மி நிறுவனத்தின் 5ஜி போன் ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி85 5ஜி போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,499 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி சி85 5ஜி அம்சங்கள் (Realme C85 5G Specifications): தரமான ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் வசதியுடன் ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமிங் பயனர்களைக் கவரும் வகையில். ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
அதுவும் 6.8-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 180Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) ஆதரவும் இதில் உள்ளது.
அதேபோல் ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி சோனி டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. இதன் மூலம் 1080பிக்சல் வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது. இதுதவிர எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கொண்ட ராணுவ தர சான்றிதழைப் பெற்றுள்ளது ரியல்மி சி85 5ஜி போன்.
தனித்துவமான அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்ட்டட் ஸ்பீக்கர் (ultra linear bottom-ported speaker), 400% ஆட்டோ வால்யூம் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 215 கிராம் ஆகும். 4ஜிபி ரேம் + 128ஜிபி கொண்டுள்ளது இந்த ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
மேலும் 7000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ரியல்மி சி85 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, க்ளோனாஸ்,ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications