Home
Deal of the day

அடிச்சு தூக்குது விற்பனை.. 7000mAh பேட்டரி.. SONY கேமரா.. 60W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் மாத இறுதி மொபைல் பெஸ்டிவல் சேல் (Flipkart Month End Mobile Festival Sale) நடந்து வருகிறது. ரியல்மி ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் ரியல்மி 15எக்ஸ் 5ஜி (Realme 15X 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலைக்கு என்னென்ன பீச்சர்கள் கிடைக்கின்றன.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.19,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.18,999 விலைக்கு இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

அடிச்சு தூக்குது விற்பனை.. 7000mAh பேட்டரி.. SONY கேமரா.. எந்த மாடல்?

ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும் கஸ்டமர்களுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பெற்று கொள்ளலாம். அக்வா ப்ளூ (Aqua Blue), மரைன் ப்ளூ (Marine Blue) அல்லது மெரூன் ரெட் (Maroon Red) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஏஐ பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கொடுக்கப்பட்டு உள்ளது.

மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களுக்கு நிகரான பில்ட் குவாலிட்டி மற்றும் ரெசிஸ்டன்ஸ் கொடுத்து உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistant) இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. லேட்டஸ்ட் மாடல்களில் கிடைக்கும் எம்ஐஎல்-எஸ்டிடி- 810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கொடுக்கிறது.

இது ஷாக் ரெசிஸ்டன்ஸ், டிராப் ரெசிஸ்டன்ஸ், ஹாட் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்ட டியூரபிலிட்டி டெஸ்டிங் செய்து முடிக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு கொடுக்கப்படும் சர்டிபிகேஷனாக இருக்கிறது. ஏஐ லேண்ட்ஸ்கேப் (AI Landscape), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) போன்ற ஏஐ பீச்சர்களும் உள்ளன. இப்போது, கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி 15எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme 15X 5G Specification): 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட டிஸ்பிளேவை இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. 1200 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் கொண்டுள்ளது.

மேலும், 16.7 மில்லியன் கலர் டெப்த் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் வழக்கமாக கிடைக்கும் ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த ரியல்மி 15எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிரது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் போக 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்டை கொண்டுள்ளது.

50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சார் கிடைக்கிறது. மேலும், செகண்டரி கேமரா சப்போர்ட் உள்ளது. ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OV50D40) சென்சாருடன் 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speaker) கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 15X 5G With 8GB Available At Discounted Price on Flipkart Month End Mobile Festival Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X