Home
Deal of the day

ரூ.9,000 டிஸ்கவுண்ட்.. 2025 குடியரசு தின விற்பனையை தெறிக்க விடும் Realme போன்.. Amazon இல் அள்ளும் ஆர்டர்!

2025 குடியரசு தினத்தை (Republic Day 2025) முன்னிட்டு அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளதில் நடக்கும் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே விற்பனையின் ஒரு பகுதியாக, கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகமான ஒரு ரியல்மி ஸ்மார்ட்போனின் மீது பெரிய அளவிலான நேரடி தள்ளுபடியும், வங்கி தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது ரியல்மி 13 பிளஸ் 5ஜி (Realme 13 Plus 5G) ஸ்மார்ட்போனாகும். நினைவூட்டும் வண்ணம் இது கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று, ரியல்மி 13 5ஜி (Realme 13 5G) உடன் சேர்த்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ரியல்மி 13 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

ரூ.9,000 டிஸ்கவுண்ட்.. Amazon இல் அள்ளும் ஆர்டர்!

அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரியல்மி 13 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 23% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.27,999 க்கு பதிலாக ரூ.21,498 க்கு வாங்க கிடைக்கிறது. கூடவே ரூ.2500 வரையிலான (எல்லா வங்கிகளின்) கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு டிஸ்கவுட்ண்டும் கிடைக்கிறது. இப்படியாக 256ஜிபி ஆப்ஷனின் இறுதி விலையை ரூ.19,000 க்கும் குறைவாக கொண்டுவர முடியும்.

இதேபோல ரியல்மி 13 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனும் 23% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.25,999 க்கு பதிலாக ரூ.19,998 க்கு வாங்க கிடைக்கிறது. இதன்மீது ரூ.2000 வரையிலான (எல்லா வங்கிகளின்) கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு டிஸ்கவுட்ண்டும் கிடைக்கிறது. ஆக இதன் விலையை ரூ.18,000 க்கும் குறைவாக கொண்டுவர முடியும்.

ரியல்மி 13 5ஜி மற்றும் ரியல்மி 13 பிளஸ் 5ஜி ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே ஒரே வடிவமைப்பை கொண்டிருந்தாலும் கூட வெவ்வேறு சிப்செட்களை பேக் செய்கின்றன. அதாவது பேஸிக் வேரியண்ட் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஓசி (MediaTek Dimensity 6300 SoC) உடன் வருகிறது.

மறுகையில் உள்ள ரியல்மி 13 பிளஸ் 5ஜி வேரியண்ட் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஓசி (MediaTek Dimensity 7300 SoC) மூலம் இயக்கப்படுகிறது. சிப்செட் மற்றும் இதர சில சிறிய மாற்றங்களை தவிர, இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஒரே மாதிரியானவை தான். இன்னும் சொல்லப்போனால் 90% ஒற்றுமைகளை கொண்டுள்ளன.

ரியல்மி 13 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 80W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது

ரியல்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது பிளஸ் வேரியண்ட்டை விட சற்று உயரமான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதுவும் 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இது 45W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

அமேசான் இந்தியாவில் வேறு என்னென்ன ரியல்மி ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ரூ.69,999 க்கு பதிலாக ரூ.54,999 க்கும், ரியல்மி 13 பிளஸ் 5ஜி (Realme 13 Plus 5G) ரூ.27,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கும், ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி (Realme Narzo 70 Turbo 5G) ரூ.19,999 க்கு பதிலாக ரூ.14,499 க்கும் வாங்க கிடைக்கும்.

இதேபோல ரியல்மி நார்சோ என்65 (Realme Narzo N65) ரூ.14,999 க்கு பதிலாக ரூ.10,249 க்கும், ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி (Realme Narzo 70x 5G) ரூ.17,999 க்கு பதிலாக ரூ.11,499 க்கும், ரியல்மி நார்சோ என்61 (Realme Narzo N61) ரூ.8,999 க்கு பதிலாக ரூ.6,499 க்கும், ரியல்மி ஜிடி 6டி 5ஜி (Realme GT 6T 5G) ரூ.35,999 க்கு பதிலாக ரூ.26,999 க்கும் வாங்க கிடைக்கும்.

Disclosure: இந்த கட்டுரையில் அஃப்லியேட் லிங்க் உள்ளது, அதாவது இதிலுள்ள லிங்க் வழியாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கினால், அதன் வழியாக நாங்கள் கமிஷனை பெறலாம் என்று அர்த்தம். எது உண்மையிலேயே சிறந்த ஆபர் அல்லது சிறந்த தயாரிப்பு என்று நம்புகிறோமோ அதை மட்டுமே உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.

English summary
Realme 13 Plus 5G Selling At Discount Price in Amazon Great Republic Day Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X