மகராசன் Redmi.. ரூ.3000 வரை தள்ளுபடி.. ஒரே நேரத்தில் மூன்று 5G போன்கள் மீது ஆபர்.. எந்த மாடல்கள்?
ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது நிலவும் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றாக்குறையால் உலகளாவிய மெமரி செலவுகள் அதிகரித்து வருவதன் விளைவாக, பல மொபைல் போன் நிறுவனங்கள் தத்தம் புதிய, லேட்டஸ்ட் மற்றும் பழைய ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தி வருகின்றன. இந்த பிரச்சினை இந்தியாவில் உள்ள "ஏறக்குறைய" அனைத்து முக்கிய ஆண்ட்ராய்டு பிராண்டுகளையும் விலைகளை உயர்த்தும் படி கட்டாயப்படுத்தியுள்ளது.
இதில் ரெட்மி நிறுவனமும் அடக்கம். ஆனால் சில தரமான ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்கள் (ரெட்மி நோட் 14 சீரிஸ்) இன்னமும் அதே அசல் விலைக்கும், இன்னும் சுவாரசியமாக ஆபர் விலைக்கும் வாங்க கிடைக்கிறது. அவைகளின் விலைகள் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கப்படலாம். ஆக முந்திக்கொள்வது நல்லது. என்னென்ன ரெட்மி ஸ்மார்ட்போன்கள் என்ன விலைக்கு கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

தற்போது பிளிப்கார்ட்டில் ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் அசல் அறிமுக விலையான ரூ.17,999 க்கு பதிலாக ரூ.14,990 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இன்னமும், அதே அசல் அறிமுக விலையான ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆனாலும் ரூ.1200 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
கடைசியாக உள்ள ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் அதன் அசல் அறிமுக விலையான ரூ.29,999 க்கு பதிலாக ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் எப்போது வேண்டுமானலும் அவுட் ஆப் ஸ்டாக் ஆகலாம் அல்லது விலைகள் மாற்றப்படலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டியுவி ரெயிண்லேண்ட் (TUv Rheinland) சான்றிதழ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட் (MediaTek Dimensity 7025 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. கூடவே பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐபி64 ரேட்டிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷனையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5110mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 14 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2, டியுவி ரெயிண்லேண்ட் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 70300 அல்ட்ரா சிப்செட் (Mediatek Dimensity 7300 Ultra) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 8எம்பி மூன்றாம் நிலை லென்ஸ்-ஐ கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது. வேகன் லெதர் பினிஷ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் ஐபி66, ஐபி67, ஐபி69 ரேட்டிங்களுக்கானஆதரவும் உள்ளது.கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 Chipset) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி ஷாவ்மீ கஸ்டம் சூப்பர் சென்சார் பிளாக்ஷிப் லைட் ஹண்டர் 800 (Xiaomi Custom Super Sensor Flagship Light Hunter 800) கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 50எம்பி போர்ட்ரெய்ட் டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது. தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி66, ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங்கை கொண்டுள்ள ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6200mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications