Home
Deal of the day

அடி தூளு.. ரூ.10,000 க்கு இறங்கிய பிரபல POCO போன்.. 5ஜி, 16GB ரேம், 5030mAh பேட்டரி, 108MP கேமரா!

போக்கோ (POCO) நிறுவனத்தின் மிகவும் பேமஸ் ஆன ஸ்மார்ட்போன்களில் ஒன்று - பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவில் நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.10,000 பட்ஜெட்டிற்கு இறங்கி வந்துள்ளது. என்ன மாடல்? அசல் விலை என்ன?ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? அது போக்கோ எம்6 பிளஸ் 5ஜி (Poco M6 Plus 5G) ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதன் எம்ஆர்பி விலையான ரூ.14,499 க்கு பதிலாக ரூ.10,299 க்கு வாங்க கிடைக்கிறது.

அடி தூளு.. ரூ.10,000 க்கு இறங்கிய பிரபல POCO போன்!

அதாவது எந்த பேங்க்கின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு சலுகைகளும் இல்லாமல் ரூ.4200 நேரடி விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கிறது. தகுதியான வாடிக்கையாளர்கள் வங்கி சலுகைகளை பயன்படுத்தி போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் கூட குறைக்கலாம்.

போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன், 2,400 x 1,080 பிக்சல்ஸ் உடனான 6.79-இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக விர்ச்சுவல் ரேம் அம்சம் வழியாக மேலும் 8 ஜிபி ரேம் என இந்த ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 16ஜிபி வரை அதிகரிக்கவும் முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை, போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. அதில் 108-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் (3எக்ஸ் இன்-சென்சார் ஜூம் ஆதரவு) மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளன. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு, முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,030mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி LTE, டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்டை ஆதரிக்கிறது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது. மேலும் இது தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி53 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் இந்த விலை குறைப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

ரூ.10,000 பட்ஜெட்டில் வேறு என்னென்ன 5ஜி ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொள்ளலாம்?
1. சாம்சங் கேலக்ஸி எம்06 5ஜி (Samsung Galaxy M06 5G) - ரூ.8,499
2. போக்கோ எம்7 5ஜி (Poco M7 5G) - ரூ.8,999
3. ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) - ரூ.7,699
4. லாவா போல்ட் என்1 5ஜி (Lava Bold N1 5G) - ரூ.7,499
5. இன்ஃபினிக்ஸ் ஹாட் 60ஐ 5ஜி (Infinix Hot 60i 5G) -ரூ.9,999

More from GizBot

Best Mobiles in India

English summary
Price Cut Alert POCO M6 Plus 5G Now available to Buy For Just Rs 10299 instead of Rs 14499 in Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X