Home
Deal of the day

படுபாதாள விலைக்கு இறங்கிடுச்சு.. 5500mAh பேட்டரி POCO 5ஜி போன் மீது ரூ.5150 விலை குறைப்பு!

போக்கோ (POCO) நிறுவனத்தின் அடுத்த எக்ஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆன போக்கோ எக்ஸ்8 சீரிஸ் (POCO X8 Series) மாடல்களின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆன வேகத்தில், இந்தாண்டின் தொடக்கத்தில் அறிமுகமான போக்கோ எக்ஸ்7 சீரீஸ் (POCO X7 Series) மாடல்களின் விலைகள் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது போக்கோ எக்ஸ்7 5ஜி (POCO X7 5G) மற்றும் போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி (POCO X7 Pro 5G) ஆகிய 2 மாடல்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு - பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் பிரதிபலிக்கிறது.

5500mAh பேட்டரி POCO 5ஜி போன் மீது ரூ.5150 விலை குறைப்பு!

அமேசான் இந்தியா வலைதளத்தில் போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இப்போது ரூ.16,849 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் அறிமுகமான போது போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.21,999 க்கு வாங்க கிடைத்தது. அதாவது இப்போது நேரடியாக ரூ.5150 விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.26,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது பிளிப்கார்ட்டில் ரூ.3000 விலை குறைக்கப்பட்டு ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் உடனே அமேசான் இந்தியா அல்லது பிளிப்கார்ட் வலைத்தளத்தை அணுகவும்.

ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள்: போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 உடனான 6.67-இன்ச் 1.5கே கர்வ்ர்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 3200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ உடனான 6.73-இன்ச் 1.5கே பிளாட் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது

வெண்ணிலா வேரியண்ட் LPDDR4X RAM மற்றும் UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜை ஆதரிக்கிறது மற்றும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HyperOS உடன் அனுப்பப்படுகிறது. ப்ரோ வேரியண்ட் ஆனது LPDDR5X ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜிற்கான ஆதரவை கொண்டுள்ளது; கூடவே HyperOS 2.0 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது

கேமராக்களை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது OIS மற்றும் EIS ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் சென்சாரை கொண்டுள்ளது; அதே சமயம் ப்ரோ மாடலில் 50 மெகாபிக்சல் சோனி LYT-600 ப்ரைமரி சென்சார் உள்ளது. இரண்டு மாடல்களிலும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் 20எம்பி செல்பீ கேமரா உள்ளது

பேட்டரியை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90W ஹைப்பர்சார்ஜ் ஆதரவுடன் 6,550mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 47 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் சார்ஜ் செய்யும் என்று கூறப்படுகிறது. மறுகையில் உள்ள போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO X7 5G and POCO X7 Pro 5G gets Price Cut Up to Rs 5150 in India Check Out Discount Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X