மிரளுது டிஸ்கவுண்ட்.. 5520mAh பேட்டரி, 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே, 50MP கேமரா.. POCO ஸ்மார்ட்போன்!
கர்ட்வ் டிஸ்பிளே மாடல்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதில் போகோ நிறுவனத்தின் கர்வ்ட் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலைக்கு கிடைப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த வரிசையில் போகோ எம்8 5ஜி (POCO M8 5G) தனியிடம் பிடித்தது. இப்போது, தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 19 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.20,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,050 தள்ளுபடியும் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.19,949 விலைக்கு கர்வ்ட் டிஸ்பிளே கொண்ட போகோ எம்8 5ஜி மாடலை வாங்கலாம்.

போகோ எம்8 5ஜி அம்சங்கள் (POCO M8 5G Specifications): 3டி கர்வ்ட் டிசைனில் 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுத்து இருக்கிறது.
மேலும், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. வெட் டச் டெக்னாலஜி 2.0 (Wet Touch Technology 2.0) கிடைக்கிறது. இதற்கு ஏற்ப IP65 ரேட்டிங் + IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் சியோமி ஹைப்பர் ஓஎஸ் 2 (Xiaomi Hyper OS 2) உள்ளது.
4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து இருக்கிறது. ஆக்டா கோர் 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Octa Core 4nm Qualcomm Snapdragon 6 Gen 3) சிப்செட்டை இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
50 எம்பி மெயின் கேமராவில் லைட் ஃப்யூசன் 400 (Light Fusion 400) சென்சார் மற்றும் எப்/1.8 அபெர்சர் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 20 எம்பி செல்பீ கேமராவில் எப்/2.2 அபெர்சர் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைத்து இருக்கிறது. 5520mAh பேட்டரியுடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
7.35 எம்எம் தடிமன் மற்றும் 211 கிராம் எடை கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப வாட்டர் ரேட்டிங் மட்டுமல்லாமல், MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிட்டியையும் கொடுத்து இருக்கிறது. டால்பி அட்மோஸ் கிடைக்கிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 6 மற்றும் ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டிகளை இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. கார்பன் பிளாக் (Carbon Black), மேலும், ப்ரோஸ்ட் சில்வர் (Frost Silver) மற்றும் கிளாசியல் ப்ளூ (Glacial Blue) ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு பக்கா பீச்சர்கள் உள்ளன.
இது பெஸ்ட் பட்ஜெட் ஆப்ஷனாக இருக்கிறதா?
3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடலாக இருந்தும், 5520mAh பேட்டரியை கொடுக்கிறது. ஆகவே, பேக்கப்பில் கவலை இருக்காது. அமோலெட் டிஸ்பிளேவாக இருப்பதால், பிரீமியம் அனுபவம் கிடைக்கும். ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும். 7.35 எம்எம் டிசைனும் பிரீமியம் பீல் கொடுக்கிறது. ஆகவே, இந்த பட்ஜெட்டுக்கு ஆப்ஷனில் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications