அள்ளு அள்ளு.. ரூ.2000 Amazon டிஸ்கவுண்ட் இன்னமும் முடியல.. 8000mAh பேட்டரி கொண்ட புது OnePlus 5ஜி போன்!
ஸ்மார்ட்போன்களின் விலைகள் - வார வாரம் விலை ஏறிக்கொண்டிருக்கும் நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக இந்திய சந்தையில் அறிமுகமான ஒன்பிளஸ் என்6 மாடலானது, சுவாரசியமாக இன்னமும் ரூ.2000 டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக கிடைக்கிறது.
ஒன்பிளஸ் என்6 முக்கிய அம்சங்கள்: ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6000 சீரிஸ் சிப்செட் மூலம் இயங்குகிறது. மேலும் இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 8000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் சதுர வடிவ கேமரா மாட்யூலில் சிங்கிள் ரியர் கேமராவை கொண்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் வேரியன்ட் ஆன 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது
இருப்பினும் அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது எச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட்டை வழங்குகிறது. இது கிட்டத்தட்ட அறிமுக விற்பனை காலத்தில் கிடைத்த (நடந்து முடிந்த அமேசான் பிரைம் டே சேலில் கிடைத்த) ஆபர் விலைக்கு இணையான டிஸ்கவுண்ட் ஆகும். இதன்கீழ் ஒன்பிளஸ் என்6-ஐ ரூ.20,999 க்கு வாங்க முடியும்.
ஒன்பிளஸ் என்6 விரிவான, முழு அம்சங்கள்:
- டூயல் சிம் (dual SIM) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்சிஜென்ஓஎஸ் 16 (OxygenOS 16)
- இரண்டு முக்கிய ஓஎஸ் அப்கிரேட்கள் (Upgrades) மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- 6.75 இன்ச் எச்டி எல்சிடி (HD LCD) டிஸ்பிளே
- 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate)
- HBM (high brightness mode) நிலையில் 1,200 நிட்ஸ் (nits) வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங்
- MIL-STD-810H இராணுவத் தரத்திலான நீடித்து உழைக்கும் சான்றிதழ்
- ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6360 அபெக்ஸ் சிப்செட்
- AnTuTu பெஞ்ச்மார்க்கிங் தளத்தில் ஒன்பிளஸ் என்6 ஆனது 6,15,800-க்கும் அதிகமான புள்ளிகளை பெற்றுள்ளது
- 6ஜிபி வரையிலான ரேம் (RAM)
- 128GB வரையிலான ஆன்போர்ட் ஸ்டோரேஜ் (onboard storage)
- வெப்ப மேலாண்மைக்காக 'வேப்பர் சேம்பர்' (vapour chamber)கூலிங் டெக்னாலஜி. இது 5,300 சதுர மிமீ வெப்பச் சிதறல் பரப்பளவை கொண்டுள்ளது.
- சிங்கிள் ரியர் கேமரா
- எப்/1.8 அப்பர்ச்சர் (aperture) கொண்ட 50 மெகாபிக்சல் கேமரா
- 10x வரையிலான டிஜிட்டல் ஜூம் வசதி
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 1080p/60 fps வரையிலான தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- டூயல்-வியூ (Dual-View) வீடியோ மோட்
- 8,000mAh பேட்டரி
- 1,600 முழுமையான சார்ஜிங் சுழற்சிகளுக்கு பிறகும் இதன் அசல் திறனில் சுமார் 80 சதவீதத்தை இது தக்கவைத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது
- மூன்று நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கும் என்று ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (wired fast charging) வசதி
- 6.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (reverse wired charging) வசதி


Click it and Unblock the Notifications