ரூ.38000 டிஸ்கவுண்ட்.. ஏசி வாங்கலயோ ஏசி.. Amazon இல் மொபைல், TV ஆபர்களை தூக்கி சாப்பிடும் AC ஆபர்கள்!
அட ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி ஆபர்லாம் நமக்கு எதுக்குங்க.. மழைக்காலத்துல ஏசி வாங்கினா விலை கொஞ்சம் கம்மியா இருக்கும். அதை இன்னும் கம்மியான விலைக்கு வாங்குற மாதிரி ஏதாச்சும் ஆபர் இருந்தா சொல்லுங்க.. என்று கூறுபவரா நீங்கள்? சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!
செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 (Amazon Great Indian Festival Sale 2025) விற்பனையின் போது, ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் மீது மட்டுமல்ல - பல பிரபலமான பிராண்டுகளின் ஏசி மாடல்கள் மீதும் கூட "நல்ல-நல்ல" டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

குறிப்பிட்ட விற்பனைக்கு முன்னதாக, அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது எந்தெந்த தயாரிப்புகளின் மீது, என்ன மாதிரியான சிறந்த சலுகைகள் கிடைக்கும் என்கிற விவரங்களை பகிர தொடங்கியள்ளது. அதில் கேரியர், எல்ஜி, ஷார்ப் மற்றும் வோல்டாஸ் போன்ற பிராண்டுகளின் ஏசிகள் அவற்றின் வழக்கமான சந்தை விலைகளை விட கணிசமாக குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 இன் கிடைக்கும் பெஸ்ட் ஏசி டீல்ஸ் (Amazon Great Indian Festival Sale 2025 Best AC Deals): ஏசிக்கள் மீதான நேரடி விலை குறைப்புகளை தவிர எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் மற்றும் வங்கி சலுகைகள் போன்ற கூடுதல் சலுகைகளையும் பெறலாம். எஸ்பிஐ (SBI) டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியை பெறுவார்கள்
ஒருவேளை ஏசி-யின் முழு விலையையும் முன்கூட்டியே செலுத்த விரும்பவில்லை என்றால், நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களை பயன்படுத்தி கொள்ளலாம். இறுதியாக, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2025 தொடங்கியதும், கூப்பன் அடிப்படையிலான தள்ளுபடிகளையும் வழங்கும். இப்படியாக கீழ்வரும் 6 ஏசி மாடல்களின் விலைகளையும் உங்களால் "அதிகபட்சமாக" குறைக்க முடியும்.
1. எல்ஜி 1.5 டன் 5 ஸ்டார் ஏசி (LG 1.5 Ton 5 Star AC): இது அசல் விலையான ரூ.85,990 க்கு பதிலாக ரூ.40,500 தள்ளுபடியை பெற்று ரூ.45,490 க்கு வாங்க கிடைக்கும்.
2. கேரியர் 1.5 டன் 3 ஸ்டார் ஏசி (Carrier 1.5 Ton 3 Star AC): இது அசல் விலையான ரூ.68,790 க்கு பதிலாக ரூ.32,800 தள்ளுபடியை பெற்று ரூ.35,990 க்கு வாங்க கிடைக்கும்
3. ஷார்ப் 1.5 டன் 3 ஸ்டார் ஏசி (Sharp 1.5 Ton 3 Star AC): இது அசல் விலையான ரூ.55,990 க்கு பதிலாக ரூ.17,000 தள்ளுபடியை பெற்று ரூ.38,990 க்கு வாங்க கிடைக்கும்.
4. ஹிட்டாச்சி 1.5 டன் 5 ஸ்டார் ஏசி (Hitachi 1.5 Ton 5 Star AC): இது அசல் விலையான ரூ.75,850 க்கு பதிலாக ரூ30,860 தள்ளுபடியை பெற்று ரூ.44,990 க்கு வாங்க கிடைக்கும்.
5. கோத்ரேஜ் 1.5 டன் 3 ஸ்டார் ஏசி (Godrej 1.5 Ton 3 Star AC): இது அசல் விலையான ரூ.45,900 க்கு பதிலாக ரூ.13,410 தள்ளுபடியை பெற்று ரூ.32,490 க்கு வாங்க கிடைக்கும்.
6. வோல்டாஸ் 1.5 டன் 5 ஸ்டார் ஏசி (Voltas 1.5 Ton 5 Star AC): இது அசல் விலையான ரூ.79,990 க்கு பதிலாக ரூ.38,000 தள்ளுபடியை பெற்று ரூ.41,990 க்கு வாங்க கிடைக்கும். மேற்கண்ட சலுகைகள் ஆனது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை என்பதை நினைவில் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications