NOKIA ஃபேன்ஸ் அசெம்பிள்.. ஆள் ஆளுக்கு ஆர்டர் போடுவாங்களே.. ரூ.5000 டிஸ்கவுண்ட் விலையில் லேட்டஸ்ட் 5G போன்!
ஆரம்பத்தில், நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனத்தின் "சொந்த ஸ்மார்ட்போன்கள்" வேலைக்கு ஆகாது என்றே பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி, எச்எம்டி கிரெஸ்ட் மேக்ஸ் 5ஜி மற்றும் எச்எம்டி ஸ்கைலைன் ஆகிய 3 மாடல்களுமே அந்த பேச்சுக்களை அடித்து துவம்சம் செய்தன; பெரிய அளவிலான வரவேற்பு இல்லை என்றாலும் கூட.. மொக்கை வாங்கவில்லை!
அதற்கு அடுத்து வெளியான எச்எம்டி ஃப்யூஷன் 5ஜி (HMD Fusion 5G) ஸ்மார்ட்போன் ஆனது விலைக்கு ஏற்ற அம்சங்களுடன் மிட்-ரேன்ஜ் விலையில் மேற்கண்ட 3 மாடல்களை விட நல்ல முறையில் விற்பனையாகும் ஒரு ஸ்மார்ட்போனாக உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் மீது திடீர் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் எச்எம்டி ஃப்யூஷன் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதன் எம்ஆர்பி விலையான ரூ.22,999 க்கு பதிலாக 17% தள்ளுபடியை பெற்று ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடவே தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படியாக இந்த ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.15,999 க்கு கொண்டுவர முடியும்.
முக்கிய அம்சங்களை பொருத்தவரை எச்எம்டி ஃப்யூஷன் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது
கேமராக்களை பொறுத்தவரை இது 108எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி இரண்டாம் நிலை சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. பேட்டரியை பொறுத்தவரை 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. முக்கியாக, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 வருட சாஃப்ட்வேர் அப்டேட்கள் கிடைக்கும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கஸ்டமைசபிள் அவுட்புட்களுடன் (Customizable Outputs) வரும் எச்எம்டி ஃப்யூஷன் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது செல்ஃப் ரிப்பேருக்கான ஆதரவையும் (Self repair support) கொண்டுள்ளது. ஒருவேளை நீங்கள் எச்எம்டி கிரெஸ்ட் மேக்ஸ் 5ஜி (HMD Crest Max 5G) ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் தற்போது இது அமேசான் இந்தியா வலைதளத்தில், அதன் எம்ஆர்பி விலையான ரூ.22,499 க்கு பதிலாக 27% நேரடி தள்ளுபடியின் கீழ் ரூ.16,499 க்கு வாங்க கிடைக்கிறது.
இதேபோல எச்எம்டி கிரெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 24% தள்ளுபடியை பெற்று ரூ.18,999 க்கு பதிலாக ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி மற்றும் எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஆகிய இரண்டுமே 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன.
மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆக்டா-கோர் 6என்எம் யுனிசாக் டி760 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. எச்எம்டி க்ரெஸ்ட் மாடல் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது. மறுகையில் உள்ள எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் மாடல் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. மேலும் எச்எம்டி க்ரெஸ்ட் ஆனது 6ஜிபி விர்ச்சுவல் ரேமை வழங்குகிறது, எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் ஆனது 8ஜிபி விர்ச்சுவல் ரேமை வழங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, எச்எம்டி க்ரெஸ்ட் மாடலானது ஏஐ-ஆதரவு கொண்ட 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. மறுகையில் மேக்ஸ் மாடலானது 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. ஆனால் இரண்டுமே 50எம்பி செல்பீ கேமரா மற்றும் 33W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications