அவனுங்க கிடக்குறானுங்க.. நான் குறைக்கிறேன் விலையை.. முழுசா ரூ.10000 விலை குறைக்கப்பட்ட Pixel போன்!
மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து கொண்டே போகின்ற (Smartphone Price Hike) சூழ்நிலையில். கூகுள் (Google) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான பிக்சல் 10ஏ (Pixel 10a) மாடல் ஆனது எந்த விலை அதிகரிப்போ அல்லது குறைப்போ இல்லாமல் அதே அறிமுக விலைக்கு (ரூ.49,999) விற்பனை ஆகிறது.
ஆனால் அதற்கும் முன்பாக அறிமுகமான பிக்சல் 9ஏ (Pixel 9a) மாடல் ஆனது ரூ.10000 நேரடி விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் அறிமுகமான போது பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு வாங்க கிடைத்தது.

ஆனால் தற்போது பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் இது ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே மாடல் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் ரூ.45,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆக ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் வழியாக வாங்குவதே நல்லது; அதிக லாபம் தரும்!
கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Pixel 9a Specifications):
- 60Hz மற்றும் 120Hz இடையேயான ரெஃப்ரெஷ் ரேட்
- 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.3-இன்ச் ஆக்டுவா டிஸ்பிளே
- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/2-இன்ச் சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், குளோஸ்டு-லூப் ஆட்டோஃபோகஸ் மற்றும் எப்/1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (இது 8x வரை சூப்பர் ரெஸ் ஜூமையும் ஆதரிக்கிறது)
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (இது 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷரை கொண்டுள்ளது)
- முன்பக்கத்தில் எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணிநேர பேட்டரி லைஃப்
- எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் மோட்-ல் 100 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆதரவு
லேட்டஸ்ட் கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Pixel 10a Specifications):
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- 6.3-இன்ச் ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே
- டென்சர் ஜி4 சிப்செட்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் (எப்/1.7) ப்ரைமரி ஷூட்டர் (25மிமீ போக்கல் லெங்த், 1/2.0-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் - OIS)
- 13 மெகாபிக்சல் (எப்/2.2) அல்ட்ராவைடு கேமரா (120-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ மற்றும் 1/3.1-இன்ச் சென்சார்)
- 13 மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்
- 5100mAh பேட்டரி
- 30W வயர்டு மற்றும் 10W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு


Click it and Unblock the Notifications