Home
Deal of the day

புது Pixel போன் வாங்கலையோ.. டிஸ்கவுண்ட்டில் Pixel 9, Pixel 9a, Pixel 10, Pixel 10a.. புது Pixel 11 வர்ற நேரம்!

கூகுள் நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஸ்மார்ட்போன்கள் ஆன பிக்சல் 11 சீரிஸ் மாடல்கள் ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்படுமென்று அறிவிக்கப்பட்ட வேகத்தில், பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது பிக்சல் 9 சீரீஸ் மற்றும் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் மீது டிஸ்கவுண்ட்களை வாரி வழங்க தொடங்கியுள்ளது.

பிளிப்கார்ட் வலைதளத்தில் என்னென்ன பிக்சல் 9 சீரீஸ் மற்றும் பிக்சல் 10 சீரீஸ் மாடல்கள் மீது அடிஸ்கவுண்ட் கிடைக்கிறது? கூகுள் பிக்சல் 10, கூகுள் பிக்சல் 10ஏ, கூகுள் பிக்சல் 9 மற்றும் கூகுள் பிக்சல் 9ஏ. இந்த 4 மாடல்களில் பிக்சல் 10 மீது மட்டுமே நேரடி விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மீதமுள்ள 3 மாடல்களும் பேங்க் டிக்ஸ்கவுன்ட்-ஐ மட்டுமே வழங்குகின்றன.

டிஸ்கவுண்ட்டில் Pixel 9, Pixel 9a, Pixel 10, Pixel 10a!

கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10): இது ரூ.79,999 க்கு அறிமுகமானது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக ரூ.4000 வரையிலான பேங்க் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட்டும் கிடைக்கிறது.

இதேபோல பிக்சல் 10ஏ ரூ.49,999 க்கு அறிமுகமானது. இதே விலைக்கு தான் பிளிப்கார்ட்டில் வாங்க கிடைக்கிறது. ஆனால் ரூ.2500 வரையிலான பேங்க் டிஸ்கவுண்ட்டை பெற முடியும். பிக்சல் 9 ரூ.79,999 க்கு அறிமுகமானது. இதே விலைக்கு தான் பிளிப்கார்ட்டில் வாங்க கிடைக்கிறது. ஆனால் ரூ.4000 வரையிலான பேங்க் டிஸ்கவுண்ட்டை பெற முடியும்.

பிக்சல் 9ஏ ரூ.49,999 க்கு அறிமுகமானது. இதே விலைக்கு தான் பிளிப்கார்ட்டில் வாங்க கிடைக்கிறது. ஆனால் ரூ.2500 வரையிலான பேங்க் டிஸ்கவுண்ட்டை பெற முடியும். இதுதவிர்த்து பிக்சல் 9 மற்றும் பிக்சல் 10 சீரீஸின் கீழ் உள்ள மற்ற ஹைஎண்ட் மாடல்கள் மீதும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இன்னும் அதிக பட்ஜெட் கொண்ட வாடிக்கையாளர்கள் அந்த மாடல்களையும் சரி பார்க்கலாம்.

பிக்சல் 11 சீரீஸ்: பிக்சல் 11 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை காணவுள்ள மேட் பை கூகுள் (Made by Google) நிகழ்வானது ஆகஸ்ட் 12 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட வேகத்தில், இந்த சீரிஸின் கீழ் வரும் புதிய கூகுள் போன்களின் விலை விவரங்கள், ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் கலர் ஆப்ஷன்கள் குறித்த தகவல்கள் லீக் ஆகியுள்ளன

இந்த சீரிஸில் கூகுள் பிக்சல் 11 (Google Pixel 11), கூகுள் பிக்சல் 11 ப்ரோ (Google Pixel 11 Pro), கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 11 Pro XL) மற்றும் கூகுள் பிக்சல் 11 ப்ரோ போல்ட் (Google Pixel 11 Pro Fold) ஆகிய நான்கு மாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போனின் 256GB மாடல் EUR 999 (சுமார் ரூ.1.08 லட்சம்) விலையில் தொடங்கலாம். இது பிக்சல் 10 மாடலின் 128GB மாடலின் அறிமுக விலையான EUR 899-ஐ விட அதிகமாகும். மேலும், இந்த போன் 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் கிடைக்கலாம் என்றும், அதன் விலை EUR 1,129 (சுமார் ரூ.1.23 லட்சம்) ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கூகுள் பிக்சல் 11 ப்ரோ மாடலின் விலை கடந்த ஆண்டின் விலையிலேயே தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இதன் 256GB மாடல் EUR 1,199 (சுமார் ரூ.1.3 லட்சம்) என்கிற விலையில் தொடங்கலாம். அதேசமயம், இதன் 512GB மற்றும் 1TB மாடல்களின் விலை முறையே EUR 1,329 (சுமார் ரூ.1.45 லட்சம்) மற்றும் EUR 1,589 (சுமார் ரூ.1.73 லட்சம்) ஆக இருக்கலாம்.

ஆனால், பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடலின் விலை, அதன் முந்தைய மாடலை விட EUR 100 அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதன் 256GB மாடல் EUR 1,399 (சுமார் ரூ.1.52 லட்சம்) என்கிற விலையில் தொடங்கலாம்; 512GB மற்றும் 1TB மாடல்களின் விலை முறையே EUR 1,529 (சுமார் ரூ.1.66 லட்சம்) மற்றும் EUR 1,789 (சுமார் ரூ.1.95 லட்சம்) ஆக இருக்கலாம்.

கூகுளின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன பிக்சல் 11 ப்ரோ போல்ட் மாடலின் விலையும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லீக் ஆன தகவல்களின்படி, 256GB மாடலின் ஆரம்ப விலை 1,999 யூரோக்களாகவும் (சுமார் ரூ.2.17 லட்சம்), 512GB மாடலின் விலை 2,129 யூரோக்களாகவும் (சுமார் ரூ.2.3 லட்சம்) மற்றும் 1TB மாடலின் விலை 2,389 யூரோக்களாகவும் (சுமார் ரூ.2.6 லட்சம்) இருக்கும் என்று தெரியவருகிறது.

Best Mobiles in India

English summary
Pixel 9 Pixel 9a Pixel 10 Pixel 10a gets Discounts in Flipkart Ahead Google Pixel 11 Launch on August 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X