தொக்கா ரூ.4000 டிஸ்கவுண்ட்.. 12GB ரேம், 48MP கேம், IP68.. சறுக்குனு சரிந்த Pixel போன் விலை.. எந்த மாடல்?
கூகுள் (Google) நிறுவனம் அதன் பிக்சல் 11 சீரீஸ் (Pixel 11 Series) ஸ்மாட்போன்களின் அறிமுக தேதியை அறிவித்த வேகத்தில், பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது பிக்சல் 10 (Pixel 10) ஸ்மார்ட்போனின் மீது வெயிட்டான பேங்க் டிஸ்கவுன்ட்டை (Bank Discount) அறிவித்துள்ளது.
நினைவூட்டும் வண்ணம் கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதும் கூட, இதே விலைக்கு தான் - இந்த ஸ்மார்ட்போன் இண்டிகோ, ஃப்ரோஸ்ட், லெமன்கிராஸ் மற்றும் அப்சிடியன் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது.

ஆனால் இந்த இடத்தில் முக்கிய பங்கு ஆற்றுவது பேங்க் டிஸ்கவுண்ட் தான். பிளிப்கார்ட்டில் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் மீது ரூ.4000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதை பெற உங்களிடம் ஐசிஐசிஐ அல்லது எச்டிஎப்சி கிரெடிட் கார்டு (ICICI or HDFC Credit Card) இருக்க வேண்டும்.
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள்:
- 1,080 × 2,424 பிக்சல்ஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- பேக் பேனலிலும் அதே ப்ரொடெக்ஷன் கிளாஸ்
- 3என்எம் டென்சர் ஜி5 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப்
- 12ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- ஏழு வருடஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- கூகுள் ஜெமினை ஆதரவு
- மெட்டீரியல் யூ எக்ஸ்பிரசிவ் டிசைன் சிஸ்டமை (Material You Expressive design system) வழங்குகிறது
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 5x ஜூம் ஆதரவுடன் 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 10.5 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- கேமரா கோச் உட்பட பல ஏஐ ஆதரவு கொண்ட இமேஜிங் டூல்கள்
- 4970mAh பேட்டரி
- 30W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 15W வரையிலான Qi2 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- பிக்சல் ஸ்னாப் ஆக்சஸெரீஸ்களுடன் இணக்கமானது
- வெப்ப மேலாண்மைக்காக ஒரு வேப்பர் கூலிங் சேம்பர்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இசிம் ஆதரவு, 5ஜி, 4ஜி, ஜிபிஎஸ், ஜிஎன்எஸ்எஸ்
- கூகுள் கேஸ்ட், ப்ளூடூத் 6, வைஃபை, என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆதரவு
பிக்சல் 11 சீரீஸ்: பிக்சல் 11 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை காணவுள்ள மேட் பை கூகுள் (Made by Google) நிகழ்வானது ஆகஸ்ட் 12 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட வேகத்தில், இந்த சீரிஸின் கீழ் வரும் புதிய கூகுள் போன்களின் விலை விவரங்கள், ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் கலர் ஆப்ஷன்கள் குறித்த தகவல்கள் லீக் ஆகியுள்ளன
இந்த சீரிஸில் கூகுள் பிக்சல் 11 (Google Pixel 11), கூகுள் பிக்சல் 11 ப்ரோ (Google Pixel 11 Pro), கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 11 Pro XL) மற்றும் கூகுள் பிக்சல் 11 ப்ரோ போல்ட் (Google Pixel 11 Pro Fold) ஆகிய நான்கு மாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போனின் 256GB மாடல் EUR 999 (சுமார் ரூ.1.08 லட்சம்) விலையில் தொடங்கலாம். இது பிக்சல் 10 மாடலின் 128GB மாடலின் அறிமுக விலையான EUR 899-ஐ விட அதிகமாகும். மேலும், இந்த போன் 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் கிடைக்கலாம் என்றும், அதன் விலை EUR 1,129 (சுமார் ரூ.1.23 லட்சம்) ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கூகுள் பிக்சல் 11 ப்ரோ மாடலின் விலை கடந்த ஆண்டின் விலையிலேயே தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இதன் 256GB மாடல் EUR 1,199 (சுமார் ரூ.1.3 லட்சம்) என்கிற விலையில் தொடங்கலாம். அதேசமயம், இதன் 512GB மற்றும் 1TB மாடல்களின் விலை முறையே EUR 1,329 (சுமார் ரூ.1.45 லட்சம்) மற்றும் EUR 1,589 (சுமார் ரூ.1.73 லட்சம்) ஆக இருக்கலாம்.
ஆனால், பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மாடலின் விலை, அதன் முந்தைய மாடலை விட EUR 100 அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதன் 256GB மாடல் EUR 1,399 (சுமார் ரூ.1.52 லட்சம்) என்கிற விலையில் தொடங்கலாம்; 512GB மற்றும் 1TB மாடல்களின் விலை முறையே EUR 1,529 (சுமார் ரூ.1.66 லட்சம்) மற்றும் EUR 1,789 (சுமார் ரூ.1.95 லட்சம்) ஆக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications